»   »  பிளாப் மேல் பிளாப் கொடுத்தாலும் அதிக சம்பளம் பெறும் ஹாலிவுட் ஹீரோ இவர் தான்!

பிளாப் மேல் பிளாப் கொடுத்தாலும் அதிக சம்பளம் பெறும் ஹாலிவுட் ஹீரோ இவர் தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோவாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளர் ஜானி டெப்.

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பைரட்ஸ் ஆப் தி கரிபியன் ஹீரோ ஜானி டெப்.

Johnny Depp, the most overpaid Hollywood actor

டெப்பின் நடிப்பில் கடைசியாக வெளியான அலீஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ் பிளாப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் படங்கள் பிளாப்பாகி வரும்போதிலும் அவருக்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்படுகிறது.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் நடிகர் வில் ஸ்மித். அவரும் தொடர்ந்து பிளாப் கொடுத்து வரும் நிலையில் அவரது சம்பளம் மட்டும் அதிகமாக உள்ளது.

வில் ஸ்மித்தை அடுத்து சானிங் டாட்டம் அதிக சம்பளம் பெறுகிறார். அவர் கடந்த ஆண்டு ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சம்பளம் வாங்கும் கலைஞர்கள் பட்டியலில் ஒரேயொரு நடிகை மட்டுமே இடம்பிடித்துள்ளார். அவர் தான் ஜுலியா ராபர்ட்ஸ். ஹீரோக்களுடன் ஒப்பிடுகையில் ஜுலியாவின் சம்பளம் குறைவு தான்.

English summary
Pirates of the Carribean star Johhny Depp is the most overpaid hero of Hollywood, according to Forbes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil