»   »  இந்த (ஜூலை) மாதம் – ஹாலிவுட் படங்களின் மாதம்

இந்த (ஜூலை) மாதம் – ஹாலிவுட் படங்களின் மாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகம் முழுவதும் மார்க்கெட் கொண்ட படங்கள் என்று ஹாலிவுட் படங்களைத் தாராளமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளிவந்து வசூலில் சக்கைப் போடு போட்ட ஜுராசிக் வேர்ல்ட் படம் அதற்கு ஒரு உதாரணம்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏராளாமான ரசிகர்கள் உள்ளதால் நாம் கண்டிப்பாக இந்தப் பட்டியலை வெளியிட வேண்டியது அவசியமாக இருக்கிறது, இந்த ஜூலை மாதம் அதிரடி ஆக்க்ஷன் படங்கள், டிராமா கலந்த படங்கள் மற்றும் நகைச்சுவை படங்கள் என்று ,எல்லாம் கலந்து கட்டி இந்த முறை ஹாலிவுட் படங்கள் வெளிவருகின்றன.

மொத்தம் 10 ஹாலிவுட் படங்கள் வெளிவருகின்றன, எந்தப் படம் எந்தத் தேதியில் வெளியாகிறது என்று பார்க்கலாம்.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ்

டெர்மினேட்டர் ஜெனிசிஸ்

ஏற்கனவே டெர்மினேட்டர் படங்கள் 4 பாகங்கள் வந்து வெற்றி பெற்றுள்ளன, இதில் 3 பாகங்களில் அர்னால்ட் படத்தின் நாயகனாக நடித்து இருந்தார். தற்போது 5 வது பாகமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தின் மூலம் உள்ளேன் ஐயா என்று சொல்லி படத்தில் நடித்திருக்கிறார்.அறிவியல் கலந்த அதிரடிப் படமான டெர்மினேட்டர் ஜெனிசிசை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஆலன் டெய்லர், அமெரிக்காவில் ஜூலை 1 தேதியே வெளியாகி விட்டது. இந்தியாவில் நாளை (ஜூலை 3) வெளியாகிறது, 3D, ஐமாக்ஸ்3D மற்றும் ரியல் 3D போன்ற முறைகளில் ரசிகர்கள் படத்தைக் கண்டு களிக்கலாம்.

மேஜிக் மைக் XXL

மேஜிக் மைக் XXL

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் வெளியாகும் அதே நாளில் மற்றொரு படம் மேஜிக் மைக் XXL, நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சானிங் தடம், மேட் போமர் ஆகியோர் சிக்ஸ்பேக் உடற்கட்டு வைத்து நடித்திருக்கின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்பு வந்து வெற்றி பெற்ற மேஜிக் மைக் திரைப்படத்தின் அடுத்த பாகமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் ஜூலை 3 அன்று தியேட்டர்களைத் தாக்க வருகிறது.

மினியன்ஸ்

மினியன்ஸ்

ஜூலை 10 தேதி திரைக்கு வர இருக்கும் படம் மினியன்ஸ், டிஸ்பிகேபிள் மீ, டிஸ்பிகேபிள் மீ 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளிவரும் படம் மினியன்ஸ். அனிமேஷன் படமாக எடுக்கப் பட்டுள்ள மினியன்ஸ் திரைபடத்தில் சான்ட்ரா பல்லாக் மற்றும் ஜான் ஹோம் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தியாவில் ஜூலை 10 தேதியில் வெளியாகும் மினியன்ஸ் அமெரிக்காவில் ஜூலை 17 ம் தேதி வெளியாகிறது.

ஆன்ட் மேன்

ஆன்ட் மேன்

ஜூலை 17 ம் தேதி திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ஆன்ட் மேன். ஹாலிவுட் நடிகர் பால் ரட் நடிப்பில் வெளியாக இருக்கும் ஆன்ட் மேன், ஒரு சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து ஸ்பைடர்மேன் வரிசையில் உருவாக்கப் பட்டிருக்கும் படமாகும். ஆன்ட் மேன் படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகும் என்று நம்பலாம்.

டிரெயின்ரெக்

டிரெயின்ரெக்

காமெடியை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் ஜூலை 17 அன்று திரைக்கு வருகிறது, ஹாலிவுட் நடிகர் ஜான் செனா இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிக்செல்

பிக்செல்

ஜூலை 24 ம் தேதியில் சோலோவாக படம் வெளியாகிறது, நோ காம்படிஷன். அறிவியல் கதையான இதில் காமெடியும் கலந்து எடுத்திருகிறார்கள், ஆதம் சான்ட்லேர், கெவின் ஜேம்ஸ் மற்றும் பீட்டர் டின்க்லேஜே போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

மிஷன் இம்பாசிபிள் – ரப் நேஷன்

மிஷன் இம்பாசிபிள் – ரப் நேஷன்

ஜூலை 31 ம் தேதி திரைக்கு வர இருக்கும் மிஷன் இம்பாசிபிள் திரைப்படம் அதிரடி ஆக்க்ஷன் கலந்த ஒரு உளவு பார்க்கும் திரைப்படம் ஆகும், மிஷன் இம்பாசிபிள் படத்தின் 5 ம் பாகமாக வெளிவருகிறது இந்தப் படம். டாம் குரூஸ் நடித்திருக்கும் இந்தப் படம் ஐமாக்ஸில் உலகெங்கும் வெளியாகின்றது.

கிரிம்ஸ்பை

கிரிம்ஸ்பை

கிரிம்ஸ்பை காமெடி கலந்த ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது, சாச்சா பரோன் கோஹன் மற்றும் அவரது மனைவி இஸ்லா பிஷேர் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் பிரிட்டிஷ் நாட்டின் கருப்பு செயல்பாடுகளை உளவு பார்க்கும் விதமாக படம் அமைக்கப்பட்டுள்ளது.

செல்ப் லெஸ்

செல்ப் லெஸ்

அறிவியல் கதையில் கொஞ்சம் த்ரில்லர் கலந்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் செல்ப்லெஸ், ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் பெண் கிங்க்ஸ்லி நடித்திருக்கும் இந்தப் படம் செகண்ட்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ஜூலை 31 அன்று இந்தியாவில் வெளியாகும் செல்ப்லெஸ் அதற்கு, இரண்டு வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் வெளியாக இருக்கிறது.

சவுத்ஸ்பா

சவுத்ஸ்பா

குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் சவுத்ஸ்பா ஒரு திரில்லர் படமாகவும் அமைந்துள்ளது, ஜேக் கிலான்ஹால் மற்றும் ஊனா லாரன்ஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜூலை மாதம் 31 ம் தேதி இந்தியாவில் படம் வெளியாகிறது, அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஜூலை 24 ம் தேதியில் படம் அமெரிக்காவில் வெளியாகிறது.

ஜூலை 31 ம் தேதி 4 படங்கள் மொத்தமாக மோதுகின்றன, இதில் எந்தப் படம் பார்வையாளர்களையும் ரசிகர்களையும் ஒருசேரக் கவர்கிறது என்று பார்க்கலாம்.

English summary
July 2015: 10 Hollywood Movie’s Released, Including 'Terminator Genisys', 'Southpaw', And Antman.
Please Wait while comments are loading...