»   »  பிரமாண்ட டைனோசர்கள் துரத்தும் 'Juraasic World : Fallen Kingdom' - டீசர் ரிலீஸ்!

பிரமாண்ட டைனோசர்கள் துரத்தும் 'Juraasic World : Fallen Kingdom' - டீசர் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டைனோசர்களைப் பற்றிய படமான 'ஜுராசிக் பார்க்' 1993-ம் ஆண்டு வெளியாகி உலக ரசிகர்களை அலற வைத்தது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இந்தப் படம் மூன்று ஆஸ்கர் விருதுகள் உட்பட 20 விருதுகளை வென்றது.

'ஜுராசிக் பார்க்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டைனோசர்களின் வெவ்வேறு வகைகளைப் பற்றிய 'ஜுராசிக் பார்க் 2', 'ஜுராசிக் பார்க் 3' ஆகிய படங்களும் வெளிவந்தன.

 jurassic world fallen kingdom teaser released

அவற்றைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு 'ஜுராசிக் வேர்ல்டு' என்ற பெயரில் ஜுராசிக் சீரிஸ் படம் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. டைனோசர் உலகத்தின் பிரமாண்டம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆச்சரியப்படுத்துவதே இந்தப் படங்களின் வெற்றிக்குக் காரணம்.

இந்நிலையில், தற்போது 'ஜுராசிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்' படம் தயாராகி வருகிறது. வரும் 2018 ஜூன் 22-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தை ஸ்பீல்பெர்க்கோடு இணைந்து முதல் பாகத்தை இயக்கிய ஜே.ஏ.பயோனா இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பிரமாண்ட டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டீசரில், துரத்தும் டைனோசர்களிடமிருந்து மனிதர்கள் தப்பித்து ஓடும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

'ஜுராசிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்' படத்தின் ட்ரெய்லர் வரும் வியாழக்கிழமை அன்று ரிலீஸாக இருக்கிறது. ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் ஜுராசிக் சீரிஸின் அடுத்த படத்தைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

English summary
The film 'Jurassic World : Fallen Kingdom' will be released on June 22, 2018. The film is directed by J.A. Bayona. This Jurassic world sequel film's teaser was released yesterday. 'Jurassic World : Fallen Kingdom' trailer will be released on this December 7.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil