»   »  வசூலில் மிரட்டும் "லேட்டஸ்ட் டைனோசர்" ... 4 நாட்களில் ரூ. 3,280 கோடி வசூலித்த ஜுராசிக் வேர்ல்ட்!

வசூலில் மிரட்டும் "லேட்டஸ்ட் டைனோசர்" ... 4 நாட்களில் ரூ. 3,280 கோடி வசூலித்த ஜுராசிக் வேர்ல்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹாலிவுட் படமான ஜூராசிக் வேர்ல்ட் திரைப்படம் ரிலீசான 4 நாட்களில் உலக அளவில் ரூ.3,280 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

டைனோசர்களை மையமாக வைத்து இதுவரை எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் வசூல் மழை பொழிந்தவை தான். முதன்முறையாக ஜூராசிக் பார்க் மூலம் டைனோசர்களைக் காட்டிய போது, எவ்வளவு பிரமிப்புடன் பார்த்தார்களோ, அதே வரவேற்பு இன்றும் மக்களிடையே உள்ளது.

அந்த வகையில் டைனோசர்களை வளர்க்கும் தீம் பார்க் கதையை மையமாக வைத்து கடந்த வாரம் ரிலீசானது ஜூராசிக் வேர்ல்ட்.

வசூல் சாதனை...

வசூல் சாதனை...

உலகம் முழுவதும் கடந்த 12ம் தேதி ரிலீசான இப்படம் நான்கே நாட்களில் 511 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது இந்திய மதிப்புக்கு சுமார் 3,280 கோடி ரூபாய் ஆகும்.

முறியடிப்பு...

முறியடிப்பு...

இதன்மூலம், ‘ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹால்லோஸ் பாகம்-2' படத்தின் சாதனையை ஜூராசிக் வேர்ல்ட் தகர்த்தெறிந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்...

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்...

சீனாவில் மட்டும் 100 மில்லியன் ( சுமார் ரூ. 600 கோடி) வசூல் செய்துள்ளது. இது தவிர 66 நாடுகளில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என இப்படம் அறிவிக்கப் பட்டுள்ளது.

3-டி...

3-டி...

அமெரிக்க ரசிகர்களை பொருத்தவரை சுமார் 48 சதவீதம் பேர் ‘ஜுராசிக் வேர்ல்ட்' திரைப்படத்தின் ‘3-டி' பதிப்பை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்துள்ளதாக ஹாலிவுட் சினிமா பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.

இர்ஃபான் கான்...

இர்ஃபான் கான்...

இந்தப் படத்தில் ஜூராசிக் பார்க் உரிமையாளராக பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடித்துள்ளார். ஜூராசிக் வேர்ல்ட் படம் வெளியான நான்கே நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இர்ஃபான்.

நெகிழ்ச்சி... மகிழ்ச்சி...

நெகிழ்ச்சி... மகிழ்ச்சி...

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்தப் புதிய படத்தின் வெற்றி எங்களுக்கு கிடைத்த ஓர் ஆசிர்வாதம். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு நெகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

அவதார் சாதனை...

அவதார் சாதனை...

மொத்த வசூல் சாதனையில் தற்போதுவரை முதல் இடத்தில் இருக்கும் ‘அவதார்' படத்தின் அசுர சாதனையை இந்த ‘டைனோசர்' முறியடிக்குமா? என்ற கேள்விக்கு பதில் இன்னும் சில நாட்களில் கிடைத்துவிடும் என ஹாலிவுட் சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ரிலீஸ் தேதி தான்...

ரிலீஸ் தேதி தான்...

மேலும், இந்தப் படம் இந்தளவுக்கு வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் அதன் வெளியீட்டு தேதி தான் என்கிறார்கள் ரசிகர்கள். ஆம், கடந்த 1993ம் ஆண்டு இதே தேதியில் ஜூராசிக் பார்க் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்...

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்...

அதோடு, ஜூராசிக் பார்க் படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குநர் ஸ்டீவன் பெர்க் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
"Jurassic World," the fourth film in the series, became the highest global opener of all time with a staggering $511.8 million in its first days in theaters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil