»   »  ஜூராஸிக் வேர்ல்ட்... இரண்டாவது ட்ரைலர் வெளியானது!

ஜூராஸிக் வேர்ல்ட்... இரண்டாவது ட்ரைலர் வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜூராஸிக் பார்க்கின் நான்காவது பாகம் எனப்படும் ஜூராஸிக் வேர்ல்ட் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஜூராஸிக் பார்க் படம் 1993-ம் ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம் பாகம் 1997-ம் ஆண்டு வெளியானது. இந்த இரு படங்களையும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். இரண்டுமே பெரும் வெற்றியைப் பெற்றன.

Jurassic World second trailer released

இதன் மூன்றாம் பாகம் 2001-வெளியானது. இதனை ஸ்பீல்பெர்க் இயக்கவில்லை. ஜோ ஜான்சன் இயக்கினார். ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பாளராக பங்கேற்றார்.

இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்து நான்காம் பாகம் வெளியாகவிருக்கிறது. இதற்கு ஜூராஸிக் வேர்ல்ட் என்று பெயரிட்டுள்ளனர். கொலின் ட்ரவெரோ இயக்கியுள்ள இந்தப் படம் வரும் ஜூன் 12-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

ஜூராஸிக் வேர்ல்டின் முதல் ட்ரைலர் கடந்த நவம்பரில் வெளியானது. இரண்டாவது ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் ட்ரைலரை 5 கோடி பேருக்கும் மேல் பார்த்துள்ளனர். இரண்டாவது ட்ரைலர் வெளியான இரண்டே நாட்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் யுட்யூபில் பார்த்து ரசித்துள்ளனர்.

English summary
The second official trailer of Jurassic World has been released in youtube on Feb 1st and received big response from viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil