»   »  ரசிகர்கள் தன்னுடன் செல்பி எடுக்கத் தடை போட்ட கிம் கர்தஷியான்

ரசிகர்கள் தன்னுடன் செல்பி எடுக்கத் தடை போட்ட கிம் கர்தஷியான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: கிம் கர்தஷியான் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் தன்னுடன் செல்பி எடுக்கத் தடை விதித்தால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பிரபல நடிகை கிம் கர்தஷியான் தனது செல்பி புகைப்படங்களை வைத்து செல்பிஷ் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி கடந்த வாரம் வெளியிட்டார். புத்தகத்தோட தலைப்பே செல்பினு இருக்கே நாம போனா நிச்சயம் கிம் கர்தாஷியானுடன் செல்பி எடுத்துக்கலாம் என்று சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சடியது. காரணம் மொபைலில் புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்டதால் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Kim Kardashian Bans Selfies At Launch of Her Book of Selfies

கிம் கர்தஷியான் இப்புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள மான்ஹட்டானில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தான் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.

பிரபல அமெரிக்க பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர் ருவேன் பிலா என்பவர் கூறுகையில் " இது போன்ற நிகழ்ச்சிகளில் விதிகளை மீறுவதில் தவறில்லை என்று கூறி உள்ளார். அதாவது தடைகளை தாண்டி புகைப்படம் எடுப்பது தவறில்லை என்ற அர்த்தத்தில் அந்த தத்துவத்தை அவர் உதிர்த்து உள்ளார்.

அவர் புத்தகத்தில் கையெழுத்திடும் அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப் படம் ஒன்று வேண்டும் என்று எனது ஆசிரியர் கண்டிப்பாக கூறியதால் நான் எனது மொபைலை மறைத்து வைத்து அந்த தருணத்தை எதிர் நோக்கி காத்திருந்து எடுத்த அந்த புகைப் படம் சரியாக வரவில்லை.

இது போல ஒரு சூழ்நிலை விளைவு என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்று மனைவிடம் வீட்டில் சொல்லிவிட்டே வந்தேன். ஆனால் விதி வசத்தால் இப்படி ஆகி விட்டது என்று மனிதன் புலம்பி தள்ளி உள்ளார்.

ஆனாலும் ஒரு போட்டோவுக்கு இப்படி புலம்புவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் !

English summary
Kim kardashian, the reality star may have a book of selfies but she wasn't up for taking any, according to reports

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil