27 வயது நபரை 4வது கணவராக கரம் பிடிக்கப் போகிறாரா 41 வயதாகும் பிரபல நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல மாடல் அழகியும் நடிகையுமான கிம் கர்தாஷியன் மீண்டும் ஒருமுறை காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ள அவர் 4வது முறையாக காதலில் விழுந்துள்ள செய்தி உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

பிரபல அமெரிக்க காமெடி நடிகர் பீட் டேவிட்சன் உடன் கடந்த வாரம் முழுக்க கிம் கர்தாஷியன் டேட்டிங்கில் இருந்துள்ள நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

263 மில்லியன் ரசிகர்கள்

263 மில்லியன் ரசிகர்கள்

இன்ஸ்டாகிராம் உலகில் 263 மில்லியன் ரசிகர்கள் அதாவது 26 கோடிக்கும் அதிகமான சர்வதேச ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமான கவர்ச்சிகரமான பதிவுகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கிம் கர்தாஷியன் வெறும் 157 பேரை மட்டுமே பின் தொடர்ந்து வருகிறார்.

கன்யே வெஸ்ட்டை பிரிந்தார்

கன்யே வெஸ்ட்டை பிரிந்தார்

2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருடன் குழந்தைகளை பெற்றுக் கொண்ட நடிகை கிம் கர்தாஷியன் சமீபத்தில் கணவர் கன்யே வெஸ்ட்டை விட்டு விலகி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தது, மனைவி கிம்மை சந்தேகித்தது என ஏகப்பட்ட சர்ச்சைகளே இவர்கள் இருவரும் பிரிய காரணம் எனக் கூறுகின்றனர்.

ஏற்கனவே 2 பேர்

ஏற்கனவே 2 பேர்

நடிகை, மாடல் அழகி, தொழிலதிபர் என பன்முகத் தன்மை கொண்டுள்ள கிம் கர்தாஷியன் கடந்த 2000ம் ஆண்டு டாமன் தாமஸ் எனும் இசை பாடல்களை தயாரிக்கும் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு 2004ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு க்ரிஸ் ஹம்ப்ரைஸ் என்பவரை திருமணம் செய்த கிம் 2013ல் அவரை விவாகரத்து செய்து விட்டு கன்யே வெஸ்ட்டை மணமுடித்தார்.

நான்காவது நபர்

நான்காவது நபர்

கன்யே வெஸ்ட்டை கிம் பிரிந்து விட்ட நிலையில், தற்போது அமெரிக்க கமெடி நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பீட் டேவிட்சன் உடன் காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

27 வயசு தான்

27 வயசு தான்

41 வயதாகும் கிம் கர்தாஷியன் தன்னை விட மிகவும் இளம் வயது வாலிபரான 27 வயதே ஆகும் பீட் டேவிட்சனை காதலித்து வருவது ஹாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும், கடந்த வாரம் முழுவதும் இருவரும் இரவு நேரங்களில் பல இடங்களுக்கு டேட்டிங் சென்ற புகைப்படங்கள் கசிந்துள்ள நிலையில், சீக்கிரமே கிம் கர்தாஷியன் தனது 4வது திருமணத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X