Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உள்ளாடையில் என்ன ட்விஸ்ட்; கிம் கர்தாஷியன் கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்திய புதிய ரக உள்ளாடைகள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச மாடல் அழகியும் ஹாலிவுட் நடிகையுமான கிம் கர்தாஷியன் ஸ்கிம்ஸ் எனும் உள்ளாடை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அமெரிக்காவின் பில்லியனர்களில் ஒருவரான இவர் ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
ஸ்கிம்ஸ் ட்விஸ்ட் எனும் உள்ளாடைகளை அணிந்த படி மாடல் அழகி ஒருவருடன் அவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் புகைப்படங்கள் உலகளவில் வைரலாகி வருகின்றன.
கணவர்
மரணத்திற்கு
பிறகு
முதல்
முறையாக
ஹேர்
ஸ்டைலை
மாற்றிய
நடிகை..
தீயாய்
பரவும்
போட்டோஸ்!

248 மில்லியன்
தினம்தோறும் கிம் கர்தாஷியனின் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. சமீபத்தில் தான் 209 மில்லியன் ரசிகர்கள் இருந்த நிலையில், தற்போது 248 மில்லியன் ஃபாலோயர்களை கடந்துள்ளார். உலகிலேயே அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ள சூப்பர் மாடலாக மாறியுள்ளார் கிம் கர்தாஷியன்.

3வது முறையாக
40 வயதாகும் கிம் கர்தாஷியன் 4 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். ஏற்கனவே இரண்டு கணவர்களை விவாகரத்து செய்துள்ள இவர், தற்போது பிரபல அமெரிக்க ராப் இசை கலைஞரான கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்துள்ளார். கிம் கர்தாஷியனின் பேச்சை மீறி அமெரிக்க தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என கன்யே பேசியது முதல் குழந்தையான நார்த்தை கருவிலே சிதைக்க நினைத்தது உள்ளிட்டவையே இந்த விவாகரத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க கோடீஸ்வரி
உலகின் டாப் சூப்பர் மாடலான இவர், தொழில் துறையிலும் சிறந்து விளங்கி அமெரிக்காவின் பில்லியனராக மாறியுள்ளார். KKW Beauty எனும் அழகு சாதன நிறுவனம் மற்றும் SKIMS எனும் உள்ளாடை நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். இவர் ஆரம்பிக்கும் பிசினஸ் எல்லாமே ஓஹோன்னு இவருக்கு பல நூறு கோடி லாபங்களை கொட்டித் தருகின்றன.

காருக்கு உடை
ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவனத்தை தொடங்கிய நடிகை கிம் கர்தாஷியன் ஏகப்பட்ட உள்ளாடைகளை அணிந்தபடி தனது சகோதரிகளுடன் இணைந்து போட்டோஷூட்களை நடத்தி அதனை பிரபலப்படுத்தினார். அது மட்டுமின்றி தனது லம்போர்கினி காருக்கே உடை தைத்துப் போட்டு இதே போல 6 மாடல்கள் டிரெஸ் சொகுசு கார்களுக்கு ரெடியாக உள்ளது என பெரும் பணக்காரர்களின் ஆசையைத் தூண்டினார்.

உள்ளாடையில் ட்விஸ்ட்
இந்நிலையில், தற்போது ஸ்கிம்ஸ் உள்ளாடையில் ட்விஸ்ட் எனும் புதிய டிசைனை அறிமுகப்படுத்தி இருக்கிறார் நடிகை கிம் கர்தாஷியன். அந்த உடைகளை அணிந்து கொண்டு தோழியுடன் அவர் வெளியிட்டுள்ள விளம்பர போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகின்றன.

அப்படி என்ன ட்விஸ்ட்
நம்ம ஊரில் லுங்கி அணியும் போது முடிச்சிப் போட்டுக் கட்டுவதை போல உள்ளாடைகளில் சில முடிச்சிக்களை போட்ட படி டிசைன் செய்து அதனை ஸ்கிம்ஸ் ட்விஸ்ட் எனும் பெயரில் விற்று காசு பார்த்து வருகிறார் கிம் கர்தாஷியன். இவரது பிராண்ட் உள்ளாடைகளின் விலைகள் 18 டாலர்கள் முதல் 98 டாலர்களுக்கும் மேல் விற்பனையாகி வருகின்றன.

2.5 மில்லியன் லைக்ஸ்
நம்ம ஊரில் சில முன்னணி நடிகைகளுக்கு மொத்தமே இருக்கும் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் அளவுக்கு இவர் பதிவிடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் அதுவும் ஒரே நாளுக்குள் லைக்குகள் குவிந்து விடுகின்றன. தற்போது அவர் வெளியிட்டுள்ள ஸ்கிம்ஸ் ட்விஸ்ட் உள்ளாடை புகைப்படங்களுக்கு சுமார் 2.5 மில்லியனுக்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளன.