கணவராக வேண்டாம்.. சேர்ந்து கம்பெனி நடத்தலாம் வாங்க.. பிரபல நடிகையின் விவகாரமான இன்ஸ்பிரேஷன்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க டிவி நடிகையும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியன் விவாகரத்தான கணவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தொழிலதிபரும் ராப் இசை பாடகருமான கன்யே வெஸ்ட் உடன் இனி இணைந்து வாழப் போவதில்லை என கிம் கர்தாஷியன் முடிவெடுத்து விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனாலும், தொடர்ந்து கணவர் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறிய கிம் கர்தாஷியன் தற்போது தொழிலும் இணைந்து அவருடன் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்து இருப்பது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன்

260 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் அதாவது 26 கோடி ரசிகர்களை கொண்டு சர்வதேச சூப்பர் மாடலாக அசத்தி வருகிறார் கிம் கர்தாஷியன். அழகு சாதன நிறுவனம் மற்றும் உள்ளாடை நிறுவனங்களை நடத்தி வரும் அவர் பல நூறு கோடிகள் லாபத்தை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறார்.

மூன்றாவது கணவர்

மூன்றாவது கணவர்

ஏற்கனவே இருமுறை திருமணமாகி விவாகரத்து செய்த கிம் கர்தாஷியன் மூன்றாவது முறையாக இத்தாலியில் கடந்த 2014ம் ஆண்டு ராப் இசை பாடகரும் தொழிலதிபருமான கன்யே வெஸ்ட்டை திருமணம் செய்து கொண்டார். கன்யே - கிம் தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் குழந்தை நார்த்துக்கு 7 வயது, மகன் செயின்ட்டுக்கு 5 வயது, மகள் சிக்காகோவிற்கு 3வயது ஆகப் போகிறது, கடைக்குட்டி மகன் சாமுக்கு 2 வயது ஆகிறது.

கன்யே வெஸ்ட்டை பிரிந்தார்

கன்யே வெஸ்ட்டை பிரிந்தார்

தனது மூத்த பெண் குழந்தை நார்த்தை கருவிலே அழிக்க கணவர் திட்டமிட்டது, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டிப் போடப் போகிறேன் என புலம்பியது உள்ளிட்ட விஷயங்களால் அப்செட்டான கிம் கர்தாஷியன் பிரபலங்களின் வழக்கறிஞரான லாரா வாஸரை வைத்து விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

அழியாத காதல்

அழியாத காதல்

என்ன தான் கணவருடன் சேர்ந்து வாழப் போவதில்லை என்கிற முடிவை கிம் கர்தாஷியன் எடுத்தாலும் கன்யே வெஸ்ட் மீது அவருக்கு கொஞ்சம் கூட கோபம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கன்யே வெஸ்ட்டின் பிறந்தநாளை முன்னிட்டு அழியாத காதலுடன் கிம் சொன்ன வாழ்த்துக்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பிசினஸ் பார்ட்னர்

பிசினஸ் பார்ட்னர்

கணவனாக வேண்டாமென கன்யே வெஸ்ட்டை ஒதுக்கிய கிம் கர்தாஷியன் தற்போது அவர் தான் தனக்கு எப்பவுமே இன்ஸ்பிரேஷன் என்றும் அவருடன் இணைந்து உள்ளாடை நிறுவனமான ஸ்கிம்ஸை வழிநடத்த விரும்புவதாகவும் தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் ஹாலிவுட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கூடிய விரைவிலேயே இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X