»   »  டாக்டர்கள் எச்சரித்தும் கர்ப்பமாகத் துடிக்கும் கவர்ச்சி நடிகை

டாக்டர்கள் எச்சரித்தும் கர்ப்பமாகத் துடிக்கும் கவர்ச்சி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியனுக்கு மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாம்.

கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் என்கிற அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலம் ஆனவர் கிம் கர்தாஷியன். அவரது கணவர் பாடகர் கான்யே வெஸ்ட்.

அவர்களுக்கு நார்த் என்ற மகளும், செயின்ட் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கிம்முக்கு மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்துள்ளது.

பிரசவம்

பிரசவம்

முதல் இரண்டு பிரசவங்களுமே பிரச்சனையாக இருந்தது. மறுபடியும் குழந்தை பெறுவது உங்களுக்கு ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் கிம்மை எச்சரித்துள்ளனர்.

குழந்தை

குழந்தை

நான் மூன்றாவது குழந்தை பெற முயற்சி செய்து வருகிறேன் என்று கிம் கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் நிகழ்ச்சியின் விளம்பர வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அம்மா

அம்மா

உனக்கு ஆபத்து ஏற்படுத்தும் எதையும் நீ செய்வதை நான் விரும்ப மாட்டேன் என்று மீண்டும் கர்ப்பமாகத் துடிக்கும் கிம்மை பார்த்து அவரது தாய் கிறிஸ் ஜென்னர் தெரிவித்துள்ளார்.

கொள்ளை

கொள்ளை

கடந்த ஆண்டு பாரீஸ் சென்ற இடத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் கிம்மிடம் இருந்த விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Reality TV star Kim Kardashian West says she wants to have a third child with her husband and rapper Kanye West. In a promo for an upcoming episode of her family TV show "Keeping Up With The Kardashians", Kim revealed her plans to have "one more baby".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil