»   »  'குங்ஃபூ பாண்டா'... சுட்டீஸின் சம்மர் நண்பேன்டா!

'குங்ஃபூ பாண்டா'... சுட்டீஸின் சம்மர் நண்பேன்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகமெங்கும் சுட்டிக் குழந்தைகள் முதல் சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பையும், ஆவலையும் உருவாக்கியிருக்கும், மிகப்பிரம்மாண்டமான அனிமேஷன் படமான ‘குங்ஃபூ பாண்டா- 3' ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வெளியாகிறது.

'குங்ஃபூ பாண்டா' வரிசை அனிமேஷன் படத்தின் முந்தையப் பாகம் இந்தியாவில் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது.

Kung Fu Panda 3 from April 1st

இந்தியாவைப் பொருத்தவரை, 'குங்ஃபூ பாண்டா -2' படத்தின் வசூல் சாதனையை, கடந்த 5 ஆண்டுகளாக வேறெந்த அனிமேஷன் படமும் முந்தவில்லை.

Kung Fu Panda 3 from April 1st

'குங்ஃபூ பாண்டா -3' அனிமேஷன் படம் சில நாடுகளில் வெளியாகிவிட்டது. வெளியான சில நாட்களிலேயே 350 மில்லியன் டாலர்களைக் குவித்திருக்கிறது. உலகின் பாதி பகுதிகளில் வெளியான நிலையிலேயே இவ்வளவு பிரம்மாண்டமான வசூலைக் குவித்திருக்கிறது. குறிப்பாக சீனாவில் இதுவரை வேறேந்த அனிமேஷன் படமும் எட்டியிராத உச்சக்கட்ட வசூலை அள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Kung Fu Panda 3 from April 1st

இந்தியா உள்ளிட்ட மீதி நாடுகளில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

Kung Fu Panda 3 from April 1st

கோடைக் காலத்தின் கொண்டாட்டத்திற்கு ஏற்றவகையில் 2டி, 3டி, 4டிஎக்ஸ் மற்றும் ஐமேக்ஸ் 3டி ஆகியவற்றில் குங்ஃபூ பாண்டா 3 வெளியாக இருக்கிறது.

Read more about: hollywood animation movie
English summary
Kung Fu Panda 3, the mega animation movie will be hits the screens on April 1st in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil