டைட்டானிக் ஹீரோ இளம் ஹாலிவுட் நடிகை இடையேயான காதல் முடிவுக்கு வந்தது: வயசு வித்தியாசம் தான் காரணமா?
அமெரிக்கா: டைட்டானிக் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ
47 வயதான லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும் 25 வயது இளம் ஹாலிவுட் நடிகையான கமிலா மோரோனுடன் டேட்டிங் செய்து வந்தார்.
இந்நிலையில், இருவரும் அவர்களது உறவு குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

டைட்டானிக் ஜாக்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான 'டைட்டானிக்' படத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. பிரம்மாண்டமான கப்பலை பின்னணியாகக் கொண்டு உலகமகா காதல் காவியமாக வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்தது. இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர், லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு உலகம் முழுக்க ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஜேக் என்ற பாத்திரத்தில் நடித்து பிரமாதப்படுத்தியிருப்பார் லியோனார்டோ டிகாப்ரியோ. இவருக்கும் கேட் வின்ஸ்லெட் இருவருக்குமான கெமிஸ்ட்ரி, செம்மையாக ஒர்க் அவுட் ஆனது.

இளம் நடிகையுடன் காதல்
'டைட்டானிக்' வெளியானதில் இருந்தே அந்தப் படத்தின் ஜேக் போல ரியல் காதல் மன்னனாக ஹாலிவுட்டை கலக்கினார் லியோனார்டோ டிகாப்ரியோ. கடந்த 4 ஆண்டுகளாக அவரை விட 22 வயது குறைவான கமிலா மோரோனை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி டேட்டிங் போவதும் வருவதுமாக நாட்களை கழித்தனர். 47 வயதான லியோனார்டோ டிகாப்ரியோவும், 25 வயதான கமிலா மோரோனும் ஒன்றாக வாழ்ந்து வந்தது ரசிகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

விமர்சனங்களுக்கு பதிலடி
இதனிடையே லியோனார்டோ டிகாப்ரியோ, கமிலா மோரோன் இருவருக்கும் இடையேயான வயசு வித்தியாசத்தை காரணம் காட்டி பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. இதனால், கடுப்பான லியோனார்டோ டிகாப்ரியோ, வயது ஒரு பொருட்டேயில்லை என பதிலளித்திருந்தார். அதேபோல், "ஹாலிவுட்டில் பல ஜோடிகள் இடையில் பெரிய வயது வித்தியாசம் உள்ளது, யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்யலாம். யாருடன் நீங்கள் டேட்டிங் செய்கிறீர்கள் என்பதை பற்றி ஒரு அடையாளம் இருக்க வேண்டும். அதற்கு வயது ஒரு காரணியாக இருக்கக் கூடாது" என கமிலா மோரோன் கூறியிருந்தார்.

பிரிவை அறிவித்த காதலர்கள்
4 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்த லியோனார்டோ டிகாப்ரியோ, கமிலா மோரோன் இருவரும் தற்போது பிரிவிதாக அறிவித்துள்ளனர். அவர்களின் பிரிவை பிரபல பீப்பிள் பத்திரிகை உறுதி செய்துள்ளது. அவர்களின் இந்த அறிவிப்பு ஹாலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்களையும் அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. வயது வித்தியாசம் இல்லாமல் காதல் வானில் சிறகடித்து வந்த இருவரும், விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பர்க்கப்பட்ட நிலையில், தற்போது பிரிவை அறிவித்துள்ளனார். ஆனாலும் அவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











