»   »  இது உங்களுக்கானது.. பழங்குடியின மக்களுக்கு கோல்டன் குளோப் விருதை சமர்ப்பித்த டிகாப்ரியோ

இது உங்களுக்கானது.. பழங்குடியின மக்களுக்கு கோல்டன் குளோப் விருதை சமர்ப்பித்த டிகாப்ரியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: 73 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெற்ற டிகாப்ரியோ அதனை உலகில் உள்ள அனைத்து பழங்குடி இன மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக கருதப்படும் 73 வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் நடைபெற்றது.

இதில் டி காப்ரியோ பழங்குடி இனத்தவராக நடித்த தி ரெவனன்ட் திரைப்படம் 3 பிரிவில் விருதுகளை வென்று சாதனை புரிந்தது.

73 வது கோல்டன் குளோப் விருதுகள்

73 வது கோல்டன் குளோப் விருதுகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் நடைபெற்ற 73 வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் நடிகர் டிகாப்ரியோ நாயகனாக நடித்த தி ரெவனன்ட் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கம் (அலெஜான்ட்ரோ கான்ஸாலெஸ் இனரிட்டு), சிறந்த நடிப்பு (லியோனார்டோ டிகாப்ரியோ) என 3 பிரிவில் விருதுகளை வென்று சாதனை புரிந்தது.

தி ரெவனன்ட் கதை

தி ரெவனன்ட் கதை

பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த சம்பவமாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ முரட்டுக் கரடியால் தாக்கப்பட்டு, குற்றுயிராக கிடந்து தப்பிப்பதுதான் கதை.

டிகாப்ரியோ

டிகாப்ரியோ

இந்த விழாவில் சிறந்த நாயகன் விருதை வென்ற டிகாப்ரியோ "இந்த விருதை உலகில் உள்ள அனைத்து பழங்குடி இன மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். இந்த விருது உலகில் உள்ள அனைத்து பழங்குடி இன மக்களுக்கும் ஒரு அடையாளமாகவும்,தளமாகவும் விளங்கும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு

இந்த பொன்னான தருணத்தில் உலகில் உள்ள அனைத்து பழங்குடி இன மக்களின் வரலாற்றை ஏற்றுக் கொள்கிறோம். அவர்களின் கலாச்சாரத்தை மதிக்கிறோம். பூர்வ குடிமக்களுக்கு எதிராக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் நில ஆக்கிரமிப்புகளை கண்டிக்கிறோம்.

போராட வேண்டும்

போராட வேண்டும்

பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் வாங்கப்படுவதற்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும். வருங்கால சந்ததிக்காக நாம் அனைவரும் இணைந்து இந்த உலகத்தைக் காப்போம்.

ஆதரவற்றுக் கிடக்கும்

ஆதரவற்றுக் கிடக்கும்

நான் வாங்கிய இந்த விருதை உலகில் ஆதரவற்றுக் கிடக்கும் அனைத்து பழங்குடி இன மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்று அறிவித்திருக்கிறார்.

English summary
73 Golden Globe Awards: Leonardo DiCaprio get Best Actor award at the 2016 Golden Globes for The Revenant Movie, Now the actor Dedicated his Award to Indigenous people Around the World.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil