»   »  பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு

பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: லிங்கின் பார்க் ராக் இசைக் குழுவின் முக்கிய பாடகரான செஸ்டர் பென்னிங்டன் அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராக் இசைக் குழு லிங்கின் பார்க். கடந்த 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இசைக் குழுவின் முக்கிய பாடகராக இருந்தவர் செஸ்டர் பென்னிங்டன்(41).

Linkin Park lead singer Chester found dead

லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டியில் உள்ள அவரது வீட்டில் செஸ்டர் பிணமாகக் கிடந்தது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

செஸ்டர் கடந்த 1999ம் ஆண்டு லிங்கின் பார்க் குழுவில் சேர்ந்தார். முன்னதாக செஸ்டரின் நெருங்கிய நண்பரும், இசைக் கலைஞருமான கிறிஸ் கார்னல் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

கிறிஸ்ஸின் பிறந்தநாள் அன்று செஸ்டர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: dead, மரணம்
English summary
American rock band Linkin Park's lead singer Chester Bennington was found dead at his residence in Los Angeles county on thursday morning.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil