»   »  நவம்பர் 7 கமலுக்கு பிறந்தநாள், இன்று மற்றொரு உலக நாயகனுக்கு பிறந்தநாள்

நவம்பர் 7 கமலுக்கு பிறந்தநாள், இன்று மற்றொரு உலக நாயகனுக்கு பிறந்தநாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோவும் உலக நாயகன் தான். உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள டைட்டானிக் நாயகன் லியோனார்டோ டிகேப்ரியோ இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Lionardo Dicaprio turns 42 today

ஹாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ள கேப்ரியோ ஆரம்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்தவர். அதன் பிறகு வெள்ளித் திரைக்கு வந்த அவருக்கு வெற்றி உடனே கிடைத்துவிடவில்லை.

டைட்டானிக் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் கேப்ரியோ. உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவானார். ஜாக்(டைட்டானிக் கதாபாத்திரம்), ஜாக் என ரசிகைகள் அவரை நினைத்து உருகினார்கள்.

வயது ஏற ஏற அதற்கேற்றது போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் அல்ல கொடூரமான வில்லனாகவும் நடிக்கத் தயங்காதவர் கேப்ரியோ. 6 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இறுதியில் இந்த ஆண்டு தான் தி ரெவ்னன்ட் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் கேப்ரியோ அசத்திவிடுவார் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் உள்ளது. கேப்ரியோவின் தாய் கர்ப்பமாக இருந்தபோது பிரபல ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் ஓவியத்தை பார்த்தாராம். அப்போது வயிற்றில் இருந்த கேப்ரியோ முதல் முறையாக உதைத்தாராம். அதனால் தான் லியோனார்டோவின் பெயரை தனது மகனுக்கு சூட்டியுள்ளார்.

English summary
Hollywood star Leonardo Dicaprio is celebrating his 42nd birthday today. We wish him a very happy birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil