»   »  நிஜ வாழ்க்கையில் இணையும் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' காதலர்கள்!

நிஜ வாழ்க்கையில் இணையும் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' காதலர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன் : பல திடீர் திருப்பங்களுடன் கூடிய ஹாலிவுட் சீரியல் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' உலகம் முழுக்க மிகவும் பிரபலம். உலகம் முழுவதும் இந்த ட்ராமா சீரிஸுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த சீரியலின் ஏழாவது சீசன் முடிவடைந்துள்ளது.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொலைக்காட்சித் தொடரில் காதலர்களாக நடித்திருக்கும் கிட் ஹாரிங்டன் மற்றும் ரோஸ் லெஸ்லீ இருவரும் நிஜ வாழ்க்கையிலும் இணைய உள்ளனர். இவர்கள் இருவரும் 2012-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்திருக்கின்றனர்.

Lovers of GoT join in real life

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியலில் இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக நடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவர்களது காதல், திருமணம் பற்றிய தகவல் மட்டும் தற்போது வந்துள்ளது.

ஆனால் எப்போது திருமணம் என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. உலகப்புகழ் சீரியல் ஜோடிகள் நிஜவாழ்க்கையில் இணைந்திருப்பது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Hollywood serial 'Game of Thrones' is very popular because of its many sudden twists. Kit Harington and Rose Leslie, who play lovers in the serial became real life couple.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil