»   »  திடுக்கிட வைக்கும் திரைக்கதையுடன் மனோஜ் சியாமளனின் அடுத்த த்ரில்லர் 'ஸ்ப்ளிட்'!

திடுக்கிட வைக்கும் திரைக்கதையுடன் மனோஜ் சியாமளனின் அடுத்த த்ரில்லர் 'ஸ்ப்ளிட்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: தமிழர்களுக்கு ஓரளவு பரிச்சயமான ஹாலிவுட் இயக்குநர் எம்.நைட் சியாமளன் அடுத்ததாக பிரபல ஸ்காட்லாந்து நடிகர் ஜேம்ஸ் மெக்காவேயுடன் இணைந்து தனது அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

யார் இந்த எம்.நைட் சியாமளன் என்று கேட்கக் கூடியவர்களுக்கு அவரது பூர்விகம் குறித்த ஒரு சின்ன தகவல். பாண்டிச்சேரியில் ஒரு மலையாளத் தந்தைக்கும் - தமிழ்த் தாய்க்கும் 1970 ம் ஆண்டு மனோஜ் நைட் சியாமளன் பிறந்தார். சியாமளனின் சிறுவயதிலேயே இவரது பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.

M. Night Shyamalan's Next Movie

மலையாளி - தமிழன் என்ற கலப்பில் பிறந்தாலும் பெரும்பாலும் தமிழனாகவே சியாமளன் அறியப்படுகிறார். முதல் படமான ப்ரேயிங் வித் ஆங்கர் படத்தை எடுத்தபோது சியாமளனின் வயது 22.

இவரின் முதல் 2 படங்கள் ப்ரேயிங் வித் ஆங்கர், வைட் அவேக் ஆகிய 2 படங்களும் சரியாகப் போகவில்லை. ஆனால் சற்றும் மனம் தளராது 1999 ம் ஆண்டில் தனது 3 வது படமான தி சிக்ஸ்த் சென்ஸ் படத்தைத் துணிந்து வெளியிட்டார்.

சிக்ஸ்த் சென்ஸ் அதன் திரைக்கதைக்காக கொண்டாடப்பட்டது. மேலும் இதுவரையிலான சியாமளன் படங்களில் மிக அதிக பணத்தை வசூல் செய்த படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.

வெறும் 40மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் சுமார் 673 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை செய்தது.

அதன் பிறகு வெளியான அன்ப்ரேக்கபிள், சைன்ஸ் மற்றும் தி வில்லேஜ் போன்ற படங்கள் நன்றாக ஓடின.

ஆனால் 2006 ம் ஆண்டில் வெளியான தி லேடி இன் தி வாட்டர் படம் அவருக்கு பெரும் சறுக்கலாக அமைந்தது.

இந்த சரிவிலிருந்து ஆப்டர் எர்த் மற்றும் தி விசிட் படங்களின் மூலமாக மீண்ட சியாமளன், தற்போது ஸ்காட்லாந்து நடிகர் ஜேம்ஸ் மெக்காவே உடன் இணைந்து தனது அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதில் கடைசியாக வெளிவந்த தி விசிட் திரைப்படம் 5 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 90 மில்லியன் டாலர் மில்லியன்களை வசூல் செய்திருக்கிறது.

2017 ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதியில் தனது அடுத்த படத்தை வெளியிட சியாமளன் முடிவு செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு சியாமளன் வைத்திருக்கும் பெயர் 'ஸ்ப்ளிட்'.

சியாமளனின் திடுக் திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையும், ஜேம்ஸ் மெக்காவேவின் பிரமாதமான நடிப்பும் ஒன்றிணைவதால் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று
ஹாலிவுட் விமர்சகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

English summary
Indian - American Film Director Manoj Night Shyamalan Next Team Up with Actor James McAvoy. The Movie Titled 'Split' Released on January 20th 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil