twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வில் ஸ்மித்- ஜேடன் ஸ்மித் இணையும் மனோஜ் ஷ்யாமளனின் 'ஆஃப்டர் எர்த்'!

    By Shankar
    |

    ஒரு சில படங்கள் எப்போது வெளிவரும் என்ற எதிர்ப்பார்ப்பை கிளறிவிடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஆஃப்டர் எர்த்.

    புதுச்சேரியைச் சேர்ந்தவரான மனோஜ் நைட் ஷ்யாமளன் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழில் அபாய கிரகம் என்ற பெயரில் வெளியாகிறது.

    வில் ஸ்மித்

    வில் ஸ்மித்

    பிரபல ஹாலிவுட் ஹீரோ வில் ஸ்மித்தும் அவர் மகன் ஜேடன் ஸ்மித்தும் தந்தை மகனாகவே நடிக்கின்றனர் இந்தப் படத்தில். கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்து வெளியிடுகிறது.

    மனோஜ் நைட் ஷ்யாமளன்

    மனோஜ் நைட் ஷ்யாமளன்

    சிக்ஸ்த் சென்ஸ் மூலம் ஹாலிவுட்டில் கால்பதித்த இந்தியரான மனோஜ் நைட் ஷ்யாமளன், அதன் பிறகு அன்பிரேக்கபிள், சைன்ஸ், தி வில்லேஜ், தி ஹேப்பனிங், டெவில் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

    மூன்றாண்டுகளுக்குப் பிறகு...

    மூன்றாண்டுகளுக்குப் பிறகு...

    42 வயதாகும் மனோஜ் ஷ்யாமளன், டெவில் படத்துக்குப் பிறகு 3 ஆண்டுகள் இடைவெளிவிட்டு இயக்கும் படம் ஆஃப்டர் எர்த்.

    கதை என்ன?

    கதை என்ன?

    இராணுவ கமாண்டோ ஆபீசர் வில் ஸ்மித்திடம் பயிற்சி பெறும் ஜூனியர் ரேஞ்சர்களில் ஒருவர் ஜேடன் ஸ்மித். ஒரு பயிற்சிக்காக வில் ஸ்மித், ஜேடன் ஸ்மித் உள்பட குழவினர் பயணிக்கும் விமானம் விண்வெளியில் விபத்துக்குள்ளாகி, வேற்று கிரகத்தில் விழுகிறது. இதில் தந்தையும் மகனும் மட்டுமே உயிர் பிழைக்கிறார்கள். மனிதர்கள் வாழத் தகுதியற்ற அந்த கிரகத்தில், மனிதர்களுக்கு எதிராக பல ஆபத்துகள் காத்திருக்கின்றன. அதிலிருந்து வில் ஸ்மித்தும் ஜேடன் ஸ்மித்தும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை மகா த்ரில்லாக சொல்லியிருக்கிறாராம் ஷ்யாமளன்.

    தமிழில் அபாய கிரகம்

    தமிழில் அபாய கிரகம்

    ஜூன் 7ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இந்தியாவில் நான்கு மொழிகளில் இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தமிழில் இந்தப் படத்துக்கு தலைப்பு அபாய கிரகம்.

    English summary
    Manoj Night Shyamalan's new movie titled After Earth will be released on June 7 worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X