»   »  'பிராஞ்சலினா' பிரிய நான் காரணம் இல்லை: பிரெஞ்சு நடிகை

'பிராஞ்சலினா' பிரிய நான் காரணம் இல்லை: பிரெஞ்சு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் ஜோடி பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜூலி பிரிய நான் காரணம் இல்லை என பிரான்ஸை சேர்ந்த நடிகை மரியான் கோட்டில்லார்ட் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகை ஏஞ்சலினா ஜுலி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிட்டுக்கும், பிரான்ஸை சேர்ந்த நடிகை மரியான் கோட்டில்லார்டுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த பிறகே ஜூலி விவகாரத்து கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Marion Cotillard Slams Rumours, confirms pregnancy

இந்நிலையில் இது குறித்து மரியான் கூறுகையில்,

பிராட் பிட், ஜூலி பிரிந்ததற்கு நான் காரணம் அல்ல எனக்கு காதலர்(பிரான்ஸை சேர்ந்த நடிகர் குல்லாமே கேனட்) உள்ளார். தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். இந்த கர்ப்பத்திற்கு பிட் காரணம் இல்லை.

என் குழந்தையின் தந்தையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவர் தான் என் காதலர், சிறந்த நண்பர், நான் விரும்புவர் என தெரிவித்துள்ளார்.

English summary
French actress Marian Cotillard said that she is not the reason for Hollywood couple Brangelina's separation.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil