செம மிரட்டல்.. Marvel Eternals படத்தின் இறுதி ட்ரெயிலர் அவுட்.. படம் எப்போ ரிலீஸ்னு பாருங்க!
லாஸ் ஏஞ்சல்ஸ்: Marvel Eternals படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் படமான எட்டர்னல்ஸ் அமெரிக்க சூப்பர் ஹீரோ படமாகும். மார்வெர்ல் காமிக்ஸ் ரேஸை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இப்படம்
இந்தப் படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்து வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் விநியோகம் செய்கிறது.

மார்வெல் எட்டர்னல்ஸில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்?
இந்தப் படம் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) 26 வது படமாக இருக்கும். பாட்ரிக் பர்லீ, ரியான் ஃபிர்போ மற்றும் காஸ் ஃபிர்போ ஆகியோரின் திரைக்கதையில் சோலோ ஜாவோ இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமயில் நன்ஜியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பாரி கியோகன், டான் லீ, ஹரிஷ் பட்டேல், கிட் ஹரிங்டன், சல்மா ஹயக் மற்றும் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

2018ல் தொடங்கிய படத்தின் பணிகள்
இந்தப் படம் தொடர்பான அறிவிப்பை மார்வெல் ஸ்டுடியோஸ் கடந்த 2018ஆம் ஆண்டு அறிவித்தது. ரியான் மற்றும் காஸ் ஃபிர்போ 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் இதன் ஸ்கிரிப்ட்டை எழுத தொடங்கினர். அதே ஆண்டு செப்டம்பரில் இயக்குநர் ஜாவோ படப்பிடிப்பை தொடங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

படக்குழுவுக்கு முழு சுதந்திரம்
மேலும் முந்தைய மார்வெல் ஸ்டுடியோஸ் படங்களை விட படத்தின் லொகேஷ் போன்ற படங்களை எடுக்கும்போது தனது சொந்த ஸ்டைலை பயன்படுத்த படக்குழுவுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஜாவோ திரைக்கதையை மீண்டும் மாற்றி எழுதினார். பின்னர் பர்லீயும் இந்த புரஜெக்ட்டில் இணைந்தார். மார்ச் 2019 இல் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது., எடர்னல்களை சித்தரிக்க ஒரு புதிய நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

பூமியை அந்நிய தீய சக்திகளிடமிருந்து காக்க
படத்திற்கான லொகேஷன் போட்டோ ஷூட் லண்டன், ஆக்ஸ்ஃபோர்டு, இங்கிலாந்து, கேனரி தீவுகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது. இந்தப் படத்தில், எட்டர்னல்ஸ், ஒரு அழியாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை தங்களின் எதிரிகளான டெவியன்ட்களிடமிருந்து பாதுகாக்க எடுக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது இப்படம்.

கடந்த வாரம் இறுதி ட்ரெய்லர் ரிலீஸ்
இந்த படத்தின் இறுதி ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது.
இதில் சாகச காட்சிகளும் திகில் சம்பவங்களையும் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் காட்சிப் படுத்தியுள்ளனர். இப்படத்தின் ட்ரெயிலருக்கு உலக ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் எப்போது ரிலீஸ்?
அதன்படி வரும் நவம்பர் 5 ஆம் தேதி மார்வெல் எட்டர்னல்ஸ் படம் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஆனால் இந்தியாவில் மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸின் இந்த படத்தை காண ரசிகர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என தெரிகிறது. ஏனெனில் இந்தியாவில் Eternals படத்திற்கான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் மிரட்டிய போதும்
கொரோனா வைரஸ் ஒவ்வொரு அலையாக மிரட்டிய போதும் படு சுவாரசியமாக படத்தை உருவாக்கியுள்ளனர். மீண்டும் கொரோனா வைரஸ் அலை அலையாக தலை தூக்க தொடங்கியுள்ளதால் பல நாடுகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கு, மால் போன்ற இடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.

விரைவில் அறிவிப்பு வெளியாகும்
இதன் காரணமாகவே முதலில் படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்வதை தவிர மற்ற நாடுகளில் எப்போது படத்தை ரிலீஸ் செய்வது என்பதை விநியோகஸ்தர்களான வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்யும் என தெரிகிறது. கொரோனா தொற்று அலையின் வேகத்தை வைத்து இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











