»   »  மெல் கிப்சனின் ஹாக்சா ரிட்ஜ், இப்போது தமிழில்!

மெல் கிப்சனின் ஹாக்சா ரிட்ஜ், இப்போது தமிழில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'அப்பகலிப்டோ' (2006) படத்தை இயக்கிய மெல் கிப்சன் பத்து வருடத்திற்கு பிறகு 'ஹாக்சா ரிட்ஜ்' (2016) என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியான இந்தப் படம் பெரிய ஹிட்டடித்துள்ளது.

Mel Gibsons Hacksaw Ridge to release in Tamil

இந்தப் படத்திற்கு 10க்கு 8.6 ஸடார் வழங்கி இருக்கிறார்கள் விமர்சகர்கள். இந்தப் படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம், ஒரு அழகிய காதலையும் அதனால் வரும் வலிகளையும் சொல்கிறது,

இந்தக் காதலுக்கு நடுவே போர் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளையும் காட்டுகின்றனர்.

அமெரிக்காவில் இந்தப் படத்தின் பிரிமியர் ஷோ முடிந்தவுடன் அரங்கத்தில் உள்ள 3000ம் பேரும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். உலக சினிமா வரலாற்றில் முதல் 250 படங்களில் இந்தப் படம் 91வது இடத்தைப் பிடித்துள்ளது. மெல் கிப்சன் படங்களில் இந்தப் படம் ஒரு மைல் கல் என்கிறார்கள். இந்தப் படத்தை தமிழ்நாட்டில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி அமர்நாத் பிக்சர்ஸ் தமிழில் வெளியிடுகிறது.

English summary
Mel Gibson's Hacksaw Ridge will be released in Tamil on Dec 9th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil