அடக்கடவுளே.. காணாமல் போனதாகக் கூறப்பட்ட டிவி நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ஹாலிவுட்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க டிவி நடிகை லிண்ட்ஸே பியர்ல்மேன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது ஹாலிவுட் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

வெறும் 43 வயதே ஆன லிண்ட்ஸே பியர்ல்மேன் ஏகப்பட்ட பிரபலமான டிவி தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்.

சில நாட்களுக்கு முன்னதாக அவர் காணாமல் போய் விட்டார் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரின் சடலம் கிடைத்திருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

அமெரிக்க டிவி நடிகை

அமெரிக்க டிவி நடிகை

ஜெனரல் ஹாஸ்பிடல், அமெரிக்கன் ஹவுஸ்வைஃப் உள்ளிட்ட பிரபலமான டிவி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை லிண்ட்ஸே எரின் பியர்ல்மேன். மாடல் அழகியான அவர், விலங்குகள் மற்றும் பறவைகளின் ஆர்வலராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், நடிகையின் திடீர் மரணம் ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

மிஸ்ஸிங்

மிஸ்ஸிங்

கடந்த பிப்ரவரி 12ம் தேதி பிரபல அமெரிக்க டிவி நடிகை லிண்ட்ஸே பியர்ல்மேன் காணாமல் போனதாக அவரது கணவர் வான்ஸ் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது மனைவியை காணவில்லை என கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் விசாரித்து வந்தனர்.

மர்ம மரணம்

மர்ம மரணம்

காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 19ம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசாருக்கு, அந்த சடலம் நடிகையின் சடலம் என்று உறுதியான நிலையில், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

இது கொலையா? அல்லது தற்கொலையா? நடிகை எப்படி இறந்தார். ஏதாவது முன்விரோதம் இருந்ததா? என பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பிரபல டிவி நடிகையின் மறைவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் கோரிக்கை

போலீஸ் கோரிக்கை

கிழக்கு ஹாலிவுட் பகுதியில் மர்மமான முறையில் நடிகை இறந்து கிடந்த நிலையில், அந்த பகுதி மக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசியாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி நடிகையை சிலர் பார்த்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தீவிரமாக விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X