»   »  மிஷன் இம்பாசிபில்- ஐந்தாம் முறையாக ஈத்தன் ஹன்டாக வரும் டாம் க்ரூஸ்!

மிஷன் இம்பாசிபில்- ஐந்தாம் முறையாக ஈத்தன் ஹன்டாக வரும் டாம் க்ரூஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'மிஷன் இம்பாசிபில்' கடந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் ரசிகர்களை கட்டிப் போட வைத்த பெயராகும்.

1960 ஆம் ஆண்டின் இறுதியல் தொலை காட்சியில் தொடராக வெளி வந்து, பின்னர் இந்த நூற்றாண்டின் துவக்கம் முதல் திரை ரசிகர்களின் திரை பசிக்கு தீனி போடக் கூடிய வகையில் வந்த படம் இந்த 'மிஷன் இம்பாசிபல்'.

டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸ்

உலகெங்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகம் வைத்து இருக்கும் பிரபல நடிகர் டாம் க்ரூஸ் இந்த படத்தில் எண்ணத்தில், செயலில், நோக்கத்தில் உயர்ந்த நாயகன் ஈத்தன் ஹன்ட் ஆக நடித்து வருகிறார். ஒற்றர்களின் வாழ்வியலை துகில் உரித்துக் காட்டும் இந்தப் படத்தில் நாயகனாக டாம் க்ருஸ் ஐந்தாம் முறையாக நாயகனாக நடிக்கிறார்.

ஒவ்வொரு பாகம் துவங்கும்போதும்..

ஒவ்வொரு பாகம் துவங்கும்போதும்..

டாம் க்ரூஸ் சொல்கிறார்...

'ஒவ்வொரு தடவையும் இதை விட என்னால் சிறப்பாக செய்ய முடியாது என்று எண்ணியே படத்தை முடிப்பேன் . ஆனால் அடுத்த பாகத்தை துவங்கும் போது முன்னர் செய்ததை விட சிறப்பாக செய்ய வேண்டும் என தீர்மானித்து சிறப்பாக செய்து முடிக்கிறேன். சண்டைக்காட்சிகளில் இது வரை இருந்ததை விட முனைப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிக தீர்மானமாக இருக்கிறேன்.

நகைச்சுவைக்கு...

நகைச்சுவைக்கு...

இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. படம் பார்க்க வரும் ரசிகர்கள் இந்தப் படத்தில் வரும் சாகசங்களை, அவர்களே செய்கிற மாதிரி நம்ப வைக்க கூடிய வகையில் தான் காட்சி அமைப்பு இருக்கும். படமாக்க பட்ட விதமும் இருக்கும்.

முரட்டு தேசம்

முரட்டு தேசம்

தொலைக்காட்சி தொடராக உருவானதிலிருந்து மாறாத அதே அழுத்தம் இந்த 'மிஷன் இம்பாசிபில் - முரட்டு தேசம்' பாகத்திலும் தொடரும். என்ன ஒன்று முன்பை விட அதிகமாக படத்தில்... உக்கிரமாக இருக்கும்.'

ஆகஸ்ட் 7 முதல்

ஆகஸ்ட் 7 முதல்

படத்தை இந்தியாவெங்கும் வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் திரையிட உள்ளது. உலகெங்கும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வெளி வர உள்ளது 'மிஷன் இம்பாசிபில்'.

English summary
Tom Cruise 5th part Mission Impossible will release on Aug 7th worldwide.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil