»   »  "நாட் நாட் செவனுக்குப்" பிடித்த நவம்பர்...!

"நாட் நாட் செவனுக்குப்" பிடித்த நவம்பர்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஜேம்ஸ் பாண்டுக்கு நவம்பர் மாதம் ரொம்ப ராசியான மாதம் போல. அந்த மாதத்தில் அதிகபட்ச ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. அடுத்த இடம் ஜில் ஜில் டிசம்பருக்குக் கிடைத்துள்ளது.

இந்தியாவில் இன்று ஸ்பெக்டர் திரைக்கு வந்துள்ளது. 24வது ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டர் கலவையான விமர்சனத்தைத் தாங்கி இந்தியாவுக்கு வந்திருந்தாலும் கூட, இந்திய ரசிகர்களின் டேஸ்ட் எப்படி என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும்.

இந்த நிலையில் ஜேம்ஸ் பட ரிலீஸ் குறித்து ஒரு பார்வை பார்த்தால் சில சுவாரஸ்யங்கள் கண்ணில் பட்டன.

நவம்பர் மாத ராசி

நவம்பர் மாத ராசி

ஸ்பெக்டரையும் சேர்த்து இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்Kள் ரிலீஸாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக 7 படங்களை நவம்பர் மாதத்தில்தான் ரிலீஸ் செய்துள்ளனர்.

கோல்டன் ஐ முதல் ஸ்பெக்டர் வரை

கோல்டன் ஐ முதல் ஸ்பெக்டர் வரை

கோல்டன் ஐ, தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப், டை அனதர் டே, காசினோ ராயல், குவான்டம் ஆப் சொலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகியவை நவம்பர் மாதத்தில் திரைக்கு வந்தவையாகும்.

டிசம்பரில் 6

டிசம்பரில் 6

அடுத்து அதிகப்படியாக டிசம்பர் மாதம் 6 படங்கள் ரிலீஸாகியுள்ளன. இந்த மாதத்தில் கோல்ட் பிங்கர், தன்டர்பால், ஆன் ஹெல் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ், டயமண்ட்ஸ் ஆர் பாரெவர், தி மேன் வித் தி கோல்டன் கன், டுமாரோ நெவர் டைஸ் ஆகியவை டிசம்பரில் வெளியான பாண்ட் படங்கள்.

ஜூனுக்கு 5

ஜூனுக்கு 5

ஜூன் மாதத்தில் வெளியான பாண்ட் படங்கள் 5. லிவ் அன்ட் லெட் லிவ், மூன்ரேக்கர், பார் யுவர் ஐஸ் ஒன்லி, ஆக்டோபஸ்ஸி ஆகியவை.

ஜூலைக்கு 3.. மே மாதத்திற்கு 2

ஜூலைக்கு 3.. மே மாதத்திற்கு 2

ஜூலையில் தி லிவிங் டேலைட்ஸ், லைசென்ஸ் டு கில், தி ஸ்பை ஹு லவ்ட் மீ ஆகியவையும், மே மாதத்தில், முதல் படமான டாக்டர் நோ மர்றும் 2வது படமான ஏ வியூ டு கில் என்ற படமும் வெளியாகின.

ஏப்ரல் - அக்டோபரில் தலா 1

ஏப்ரல் - அக்டோபரில் தலா 1

ஏப்ரல் மாதம் பிரம் ரஷ்யா வித் லவ் படமும், அக்டோபரில், நெவர் சே நெவர் எகெய்ன் படமும் வெளியாகின.

English summary
One can see that most of the bond films have been released on November. The latest November flick is Spectre.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil