twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுதான் அடுத்த லெவல்..விண்வெளியில் முதல் ஆக்‌ஷன் படம்..பிரபல ஹீரோ திட்டத்தை உறுதிப்படுத்திய நாசா!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹீரோ நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் விண்வெளியில் நடத்த இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது.

    பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ டாம் குரூஸ். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

    டாப் கன், காக்டெய்ல், ஸ்பேஸ் ஸ்டேஷன் 3டி, த லாஸ்ட் சாமுராய், எட்ஜ் ஆப் டுமாரோ உட்பட இவரது பல படங்கள் கவனிக்கப்பட்டன.

    கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஒரு பிரபல நடிகர் உயிரிழப்பு.. திரையுலகம் அதிர்ச்சி!கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஒரு பிரபல நடிகர் உயிரிழப்பு.. திரையுலகம் அதிர்ச்சி!

    ஆக்‌ஷன் காட்சிகள்

    ஆக்‌ஷன் காட்சிகள்

    இவரது, மிஷன்: இம்பாசிபிள் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஆஸ்கர் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ள இவர், கோல்டன் குளோப் விருதுகளை மூன்று முறை பெற்றவர். ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் டாம் குரூஸ், மிஷன் இம்பாசிபிள், த லாஸ்ட் சாமுராய் உட்பட பல படங்களை தயாரித்தும் உள்ளார்.
    சில படங்களின் ஷூட்டிங்கின் போது காயமடைந்தும் உள்ளார்.

    ஸ்பேஸ் எக்ஸ்

    ஸ்பேஸ் எக்ஸ்

    இந்நிலையில் இவர் தனது அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கை விண்வெளியில் நடத்த இருக்கிறார். இதுபற்றி அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனர் எலன் மஸ்க் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்வெளி நிலையத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதை படமாக்கத் திட்டமிட்டுள்ள டாம் குரூஸ், இது தொடர்பாக 'நாசா'வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது. இது அதிரடி ஆக்‌ஷன் படமாகவும் விண்வெளியில் படமாக்கப்படும் முதல் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பிரபலமான மீடியா

    பிரபலமான மீடியா

    இந்நிலையில் இந்த தகவலை நாசா நிர்வாகி, ஜிம் பிரிடென்ஸ்டைன் ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார். 'விண்வெளி நிலையத்தில் டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாசா உற்சாகமாக இருக்கிறது. நாசாவின் லட்சியத் திட்டங்களை நனவாக்குவதற்காக புதிய தலைமுறை பொறியாளர்களையும் விஞ்ஞானிகளயும் ஊக்குவிக்க பிரபலமான மீடியா தேவை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கர்கள், இதுதாங்க நிஜமாகவே அடுத்த லெவல் என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    Nasa confirms Tom Cruise’s plans to shoot in space with the help of Elon Musk’s Space X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X