»   »  அடுத்த ஜேம்ஸ் பாண்ட்: இத்ரிஸ் எல்பாவுக்காக வாய்ஸ் கொடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

அடுத்த ஜேம்ஸ் பாண்ட்: இத்ரிஸ் எல்பாவுக்காக வாய்ஸ் கொடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கருப்பினத்தை சேர்ந்த இத்ரிஸ் எல்பாவை அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக்க விரும்புகிறார் ஹாலிவுட் இயக்குனர் ஸ்வீன் ஸ்பீல்பெர்க்.

ஜேம்ஸ் பாண்ட் நடிகர்கள் என்றாலே அவர்கள் வெள்ளையர்களாகவே உள்ளனர். தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் டேனியல் கிரைகை அடுத்து யார் அந்த இடத்திற்கு வரப் போகிறார்கள் என்பது தான் ஹாலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

இந்த நடிகர் தான் வருவார், அந்த நடிகர் தான் வருவார் என ஒரு பெரிய பட்டியலே உள்ளது.

டேனியல் கிரைக்

டேனியல் கிரைக்

இனி ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதற்கு பதிலாக நான் கை நரம்பை அறுத்துக் கொள்வேன் என்று தெரிவித்து பரப்பை ஏற்படுத்தினார் தற்போதைய பாண்ட் 007 டேனியல் கிரைக்.

ஜேம்ஸ் நார்டன்

ஜேம்ஸ் நார்டன்

ஜேம்ஸ் நார்டன், டேமியன் லீவிஸ், அய்டன் டர்னர், டாம் ஹிட்டல்ஸ்டன் உள்ளிட்ட 11 நடிகர்களில் யாராவது ஒருவர் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ஆகலாம் என்று ஹாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இத்ரிஸ் ஆல்பா

இத்ரிஸ் ஆல்பா

இங்கிலாந்தை சேர்ந்த இத்ரிஸ் எல்பாவை(43) அடுத்த ஜேம்ஸ் பாண்டாக பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதே சமயம் அவருக்கு வயதாகிவிட்டதே என்ற பேச்சும் உள்ளது. இந்நிலையில் தான் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கும் எல்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

பாண்ட் பற்றி ஸ்பீல்பெர்க் கூறுகையில், நான் பாண்ட் படங்களின் பெரிய ரசிகன். கருப்பினத்தை சேர்ந்தவரை பாண்டாக பார்க்க விரும்புகிறேன். டேனியல் திரும்பி வராவிட்டால் இத்ரிஸ் எல்பாவை பாண்டாக பார்க்க விரும்புகிறேன் என்றார்.

புதிய வரலாறு

புதிய வரலாறு

இதுவரை இருந்த, இருக்கும் பாண்ட் நடிகர்கள் அனைவரும் வெள்ளையர்கள். இந்நிலையில் இத்ரிஸ் எல்பா தேர்வு செய்யப்பட்டால் கருப்பினத்தை சேர்ந்த முதல் பாண்ட் என்ற பெருமையை அவர் பெறுவார்.

English summary
Hollywood director Steven Spielberg wants to see Idris Alba to be the first black 007.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil