twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட கொடுமையே.. ஜேம்ஸ் பாண்ட் படத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.. என்ன ஆச்சு தெரியுமா?

    |

    Recommended Video

    James Bond new movie Trailer Review | James Bond | Daniel Craig

    லாஸ் ஏஞ்சல்ஸ்: டேனியல் கிரெய்க் நடிப்பில் உருவாகி உள்ள ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உலகளவில் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி பீதியை கிளப்புகின்றன.

    இந்நிலையில், சீனாவில் நடைபெற இருந்த No Time To Die படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியை தயாரிப்பு தரப்பு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

    தியேட்டர்ல இருந்து வரும் போது எல்லாரும் சிரிச்சுட்டே வராங்க.. சந்தோஷமா இருக்கு.. நடிகை ஹேப்பி!தியேட்டர்ல இருந்து வரும் போது எல்லாரும் சிரிச்சுட்டே வராங்க.. சந்தோஷமா இருக்கு.. நடிகை ஹேப்பி!

    ஆள விடுங்கடா சாமி

    ஆள விடுங்கடா சாமி

    2006ம் ஆண்டு வெளியான கேசினோ ராயல் படத்தின் மூலம் ஆசை ஆசையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் 007 ஆக நடித்த டேனியல் கிரெய்க், ஆள விடுங்கடா சாமி, என்ற ரேஞ்சுக்கு இதற்கு மேல் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க முடியாது என கூறினாலும், விடாப்பிடியாக இந்த படத்தில் நடிக்க வைத்து விட்டனர்.

    இதுதான் கடைசி

    கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்டர் என 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரெய்க் தனது 5வது மற்றும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக நோ டைம் டு டை படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ஒரு கோடிக்கும் மேல் வியூஸ்களை அள்ளி குவித்துள்ளது.

    2வது பெரிய மார்க்கெட்

    2வது பெரிய மார்க்கெட்

    சினிமா துறையை பொறுத்தவரையில் உலகிலேயே அமெரிக்காவை தொடர்ந்து சீனா தான் இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக இருக்கிறது. இதனால், சீனாவில் டேனியல் கிரெய்க் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான ப்ரீமியர் ஷோ சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.

    ஆப்பு வைத்த கொரோனா

    ஆப்பு வைத்த கொரோனா

    சீனாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், அங்கு சினிமா வாழ்க்கையை தாண்டி இயல்பான வாழ்க்கையே பெருமளவில் முடங்கி உள்ளது. இதனால், ஏப்ரல் மாதம் ரிலீசாகவுள்ள நோ டைம் டு டை படத்தின் ப்ரீமியர் காட்சியை ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் தடை செய்துள்ளனர்.

    என்ன கதை?

    என்ன கதை?

    ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே ரகசிய உளவாளியாக நாயகன் களமிறங்கி, பெரிய பெரிய மிஷன்களை தனது ஸ்டைலில் அதிரடியாக நடத்தி முடிப்பது தான். இந்த படத்தில், பாண்ட் வேலைக்கு ஓய்வு கொடுத்து விட்டு, உல்லாசமாக இருக்க வரும் டேனியல் க்ரெய்கை துரத்தும் பிரச்சனைகளும், உலகையே அழிக்க விஞ்ஞானி வில்லன் நடத்தும் சூழ்ச்சியை ஜேம்ஸ் பாண்ட் எப்படி முறியடிக்கிறார் என்பதும் தானாம்.

    English summary
    'No Time To Die' cast was all set to promote the movie in China ahead of its release on April 8. Now, makers have scrapped the plans due to the deadly coronavirus outbreak in the country.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X