twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டேனியல் கிரேக் நடித்த “நோ டைம் டு டை“…. எதிர்பார்த்த வசூல் இல்லை !

    |

    அமெரிக்கா : டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கு நோ டைம் டு டை (No Time to Die) படத்தின் வசூல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    லண்டனில் இப்படம் செப்டம்பர் 30ந் தேதி வெளியான நிலையில், அமெரிக்காவில் அக்டோபர் 8ம் தேதி வெளியானது.

    இப்படத்தில், டேனியல் கிரேக்கின், நடிகை லாஷனா லின்ச்,ரேமிக் மேலக், நவ்மி ஹர்ரிஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேரி ஜோஜி புகுனாகா இப்படத்தை இயக்கி உள்ளார்

    பீட்சா 3 தயார் டீசர் எப்போது தெரியுமா .. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!பீட்சா 3 தயார் டீசர் எப்போது தெரியுமா .. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

    நோ டைம் டு டை

    நோ டைம் டு டை

    உலகம் முழுவதும் மிக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் நடித்த 'நோ டைம் டு டை' என்ற திரைப்படமாகும். 2006ம் ஆண்டு வெளியான கேசினோ ராயல் திரைப்படத்தில் புதிய ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரேக் அறிமுகமானார். இந்த திரைப்படத்திக் கிரேட் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலேஸ், ஸ்கைஃபால் மற்றும் ஸ்பெக்டர் ஆகிய படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    இத்திரைப்படம் 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் வியாபாரம் சுமாராக 600 மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்கப்பட்டது. இத்திரைப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியான, இந்த படத்தின் வசூல் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கிட்டத்தட்ட 90 மில்லியன் டாலர்களை வார இறுதியில் வசூலிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் வெறும் 55 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது. கொரோனாவின் காரணமாகத்தான் இத்திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதிரடி காட்சிகள்

    அதிரடி காட்சிகள்

    கிரேக்குடன் அவரது நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் மிகவும் சுவாரசியத்தை கூட்டியுள்ளது. படம் மிக வேகமாக நகர்கிறது. மிக அரிதாகவே, அதிரடி காட்சிகளுகள் மூச்சு முட்டும் அளவுக்கு இருக்கிறது. டேனியல் கிரேக் நடித்த சிறந்த ஜேம்ஸ் பாண்ட் என்றால் இது தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    அதிக நேரம்

    அதிக நேரம்

    ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே அதிக நேரம் கொண்ட படமாக 2 மணி நேரம் 43 நிமிடங்கள் இந்த படம் ஓடுகிறது. தேபோல நடிகை லாஷனா லின்ச்சின் நடிப்பையும் புகழ்ந்திருக்கின்றனர். இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலாகாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    English summary
    Daniel Craig’s No Time to Die won’t be one for box office record books.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X