For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வித்தியாசமான ஒரு (கொள்ளை) படம்

  By Manjula
  |

  சென்னை: தமிழ்ப் படங்கள் மட்டும் இல்லை எல்லா மொழிப் படங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெறும் படங்கள், என்று பார்த்தால் அது நிச்சயம் கொள்ளை அடிக்கும் படங்களாகத் தான் இருக்கும்.

  அதிலும் அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமான முறையில் கொள்ளை அடிக்கும் காட்சிகளைக் கொண்டு, எடுக்கப்பட்ட படங்கள் சத்தியமாக வசூலில் சாதனை செய்தே தீரும்.

  தமிழில் ஜென்டில்மேன் மற்றும் ஹிந்தியில் தூம் 2 இந்த 2 படங்களும் வழக்கமான கொள்ளைப் படங்கள் தான் ஆனால், கொள்ளை அடிக்கும் முறையில் வித்தியாசம் காட்டியதால் இவை இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படங்களாக இன்றளவும் இருக்கின்றன.

  அந்த வகையில் ஓசன் 11 ஹாலிவுட் படத்தைப் பற்றிப் பார்க்கலாம், 2001 ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் இன்றளவும் மற்றத் திரைப்படங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், கொள்ளையடிக்கும் தொழிநுட்பங்களைக் கற்றுத் தரும் குருவாகவும் விளங்குகிறது.

  ஓசன் 11

  ஓசன் 11

  1960 ல் வெளிவந்த ஓசன் 11 திரைப்படத்தில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து 2001 ல் ஓசன் 11 என அதே பெயருடன் மீண்டும் வெளியான திரைப்படம் இது. ஹாலிவுட்டின் மிகப்புகழ் பெற்ற நடிகர்களான ஜார்ஜ் குலூனி , பிராட் பிட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் நடிப்பில் வெளிவந்த, இந்தத் திரைப்படம் காமெடி + ஆக்க்ஷன் கலந்து வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

  66 கோடியை கொள்ளை அடிக்கும் 11 பேர்

  66 கோடியை கொள்ளை அடிக்கும் 11 பேர்

  படத்தோட கதை இதுதான், ஹீரோ ஜார்ஜ் குலூனி ஜெயில்ல இருந்து விடுதலையாகி தன்னோட நண்பனை பார்க்கப் போகிறார். சூதாட்ட விடுதிகள்ள நிறைய பணம் இருக்கு அதை கொள்ளை அடிப்போம்னு தன்னோட நண்பன்கிட்ட ஹீரோ கேட்கறார். அதுக்காக பிளான் பண்ணும் போது மேலும் 9 பேரை தங்களோட சேர்த்துக்கறாங்க, இந்த 11 பேர் கொண்ட குழு எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடாம 66 கோடியை எப்படிக் கொள்ளை அடிக்கிறாங்க இதுதான் கதை.

  கொள்ளை அடிக்கத் தடையாய் இருக்கும் 2 காரணிகள்

  கொள்ளை அடிக்கத் தடையாய் இருக்கும் 2 காரணிகள்

  கொள்ளை அடிக்கப் போற இடத்துல இவங்களைத் தடுக்கற விதமா 2 விஷயம் இருக்கு 1.சிசி டிவி, 2.அலாரம் சிஸ்டம். இந்த இரண்டையும் ஏமாத்தி எப்படிக் கொள்ளை அடிக்கிறாங்கன்னு பரபரப்பா சொல்லி இருக்கார் இயக்குநர் ஸ்டீவன் சோடேர்பெர்க்.

  ஹீரோவின் முன்னால் மனைவியாக நாயகி

  ஹீரோவின் முன்னால் மனைவியாக நாயகி

  ஹீரோ ஜார்ஜ் குலூனியையும் சேர்த்து மொத்தம் 11 பேர் கொண்ட குழுவாக இணைந்து கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். கொள்ளை அடிக்கப் போற கேசினோ கிளப் ஓனரோட காதலியா ஹீரோவோட முன்னால் மனைவி இருக்காங்க. இதத் தெரிஞ்சிகிட்ட மத்தவங்க ஹீரோயின் கிட்ட உதவி கேட்கலாம்னு சொல்றாங்க ஆனா ஹீரோ அதுக்கு ஒத்துக்கொள்ள மறுத்து, நம்மோட சொந்த முயற்சியிலேயே கொள்ளை அடிச்சிக்கலாம் அப்படின்னு சொல்றாரு.

  பட்டையைக் கிளப்பும் வசனங்கள்

  பட்டையைக் கிளப்பும் வசனங்கள்

  படத்தோட பெரும்பாலான வசனங்கள் தெறிக்கின்ற ரகம் அதிலும் ஹீரோ தன்னோட முன்னால் மனைவிகிட்ட பேசுற 2 வசனங்கள் சான்ஸ்லெஸ்.

  ஹீரோ :டியர் நீ இப்போ உன் புதுக் காதலன் கூட சந்தோஷமா இருக்கியா?

  ஹீரோயின் : அவர் உன்ன மாதிரி என்ன அழவச்சிப் பார்க்க மாட்டாரு

  சூதாட்ட விடுதிக்கு ஒரு விசிட் அடிக்கும் ஹீரோ ஹீரோயினிடம்

  ஹீரோ :எதேச்சையாத் தான் இங்க வந்தேன் நீ உன்னோட புதுக் காதலன் கூட இருக்கேன்னு எனக்குத் தெரியாது

  ஹீரோயின்: அடிக்கடி இப்படி எதேச்சையா வர மாட்டிங்கன்னு நம்பறேன்.

  ஒரிஜினலை விட ரீமேக் சூப்பர்

  ஒரிஜினலை விட ரீமேக் சூப்பர்

  1960 ல் வெளிவந்த ஒரிஜினல் படத்தை விட 2001 ல் வெளிவந்த ரீமேக் திரைப்படம் சூப்பரா இருக்குதுன்னு, படத்தைப் பார்த்தவங்க கருத்துத் தெரிவிச்சு இருக்காங்க. முக்கியமா படத்தோட ஸ்டைலிஷ் சான்சே இல்ல, படத்துல வர்ற ஹீரோ, ஹீரோயின்களோட ஆடை வடிவமைப்பும் கண்ணைக் கவரும் விதமாகவே இருக்கின்றன.

  ஓசன் 11 வசூலின் உச்சம்

  ஓசன் 11 வசூலின் உச்சம்

  உலகம் முழுவதும் ஓடிய இந்தத் திரைப்படம் வசூலைக் கொட்டோ கொட்டென்று கொட்டி, படம் தயாரித்தவர்களைப் பணமழையில் நனைய வைத்தது. 85 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட ஓசன் 11 சுமார் 450 மில்லியன்களை வசூலித்து வரலாறு படைத்தது.

  மொத்தத்தில் படம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது, தனியாகவோ அல்லது குடும்பத்தினருடனோ ஒரு தடவை பார்த்து மகிழலாம்.

  English summary
  Ocean’s Leven American Action Thriller Movie, Directed By Steven Soderbergh.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X