»   »  இது என்ன பேன்டீன் விளம்பரமா?: பிரியங்காவின் டிவி தொடரை கிண்டல் செய்த ஹாலிவுட் நடிகை

இது என்ன பேன்டீன் விளம்பரமா?: பிரியங்காவின் டிவி தொடரை கிண்டல் செய்த ஹாலிவுட் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியங்கா சோப்ரா நடித்து வரும் ஹாலிவுட் டிவி தொடரை தீபிகா படுகோனே நடிக்கும் ஹாலிவுட் படத்தின் சக நடிகை கிண்டல் செய்துள்ளார்.

பாலிவுட்டில் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் டிவி தொடரான குவான்டிகோவில் நடித்து வருகிறார். ஹாலிவுட் டிவி தொடரில் இந்திய நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

குவான்டிகோ தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆஸ்கர்

ஆஸ்கர்

பிரியங்கா சோப்ரா ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டு விருதை வழங்கினார். அவரை உலக நாயகன் கமல் ஹாஸன் கூட பாராட்டியிருந்தார்.

குவான்டிகோ

குவான்டிகோ

குவான்டிகோ தொடரின் இரண்டாவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது. இதற்கான விளம்பர வீடியோ ஆஸ்கர் விருது விழாவில் ஒளிபரப்பானது.

கிண்டல்

கிண்டல்

தீபிகா படுகோனே வின் டீசலுடன் சேர்ந்து XXX என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே படத்தில் நடிக்கும் ரூபி ரோஸ் என்ற நடிகை பிரியங்காவின் டிவி தொடரை கிண்டல் செய்துள்ளார்.

பேன்டீன் விளம்பரம்

பிரியங்கா நடிக்கும் டிவி தொடர் குறித்து ரூபி ரோஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, குவான்டிகோ விளம்பரத்தை பார்த்து அது பேன்டீன் விளம்பரம் என நினைத்தேன். துப்பாக்கிகள் மற்று பிறவற்றை பார்த்த பிறகே இந்த விளம்பரம் என்ன இப்படி இருக்கிறது என நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
While Priyanka Chopra is enjoying the limelight at Oscars 2016, her close friend, Deepika Padukone's co-star just insulted her TV show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil