14 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்.. ஆஸ்கர் வென்ற நடிகர் மீது.. கனடா நடிகை பரபரப்பு புகார்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் டிமோதி ஹட்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கனடா நாட்டை சேர்ந்த நடிகை செரா ஜான்ஸ்டன் புகார் அளித்துள்ளார்.

ஆர்டினரி பீப்பிள் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதை வென்ற டிமோதி ஹட்டன் மீது இப்படி ஒரு பாலியல் சர்ச்சை எழுந்துள்ளது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஹாலிவுட் பிரபலம் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

14 வயசு

14 வயசு

பிரபல ஹாலிவுட் நடிகர் டிமோதி ஹட்டன், தான் 14 வயதாக இருக்கும் போது, தன்னை பலாத்காரம் செய்தார் என கனடா நாட்டு நடிகை செரா ஜான்ஸ்டன் குற்றம்சாட்டி உள்ளார். 14 வயதில் மாடலிங் துறையில் சேர்ந்த தன்னை ஆஸ்கர் விருது வென்ற டிமோதி ஹட்டன் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஆஸ்கர் வென்ற நடிகர்

ஆஸ்கர் வென்ற நடிகர்

Ordinary People படத்தில் நடித்த டிமோதி ஹட்டனுக்கு கடந்த 1981ம் ஆண்டு சிறந்த துணை நடிகர் விருது ஆஸ்கர் விருது மேடையில் வழங்கப்பட்டது. 1983ம் ஆண்டு ஹோட்டல் அறை ஒன்றில், மாடல் அழகியாக அறிமுகமான செரா ஜான்ஸ்டனை டிமோதி ஹட்டன் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீண் பழி

வீண் பழி

டிமோதி ஹட்டன் மீது இத்தனை ஆண்டுகள் கழித்து செரா கூறியுள்ள குற்றச்சாட்டு ஹாலிவுட் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தன் மீது, வேண்டும் என்றே வீண் பழி சுமத்துகிறார் செரா ஜான்ஸ்டன், தான் ஒரு போதும், அவ்வாறு அத்துமீறவில்லை என அமெரிக்க பத்திரிகைகளுக்கு பதில் அளித்துள்ளார் டிமோதி.

ஏன் இப்போ

ஏன் இப்போ

50 வயதை கடந்துள்ள டிமோதி ஹட்டன் மீது, ஏன் இப்போது குற்றம் சுமத்துகிறீர்கள், அப்போதே புகார் தெரிவித்திருக்கலாமே என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, எல்லாத்துக்கும் காரணம் பயம் தான். அவர் ஆஸ்கர் வென்ற மிகப்பெரிய நடிகர், மீடூ இயக்கம் கொடுத்த நம்பிக்கையே தற்போது, அந்த சம்பவம் குறித்து பேச தைரியம் கிடைத்துள்ளது என்றுள்ளார்.

ஹார்வி வெயின்ஸ்டீன்

ஹார்வி வெயின்ஸ்டீன்

80க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த பாலியல் புகார்களை தொடர்ந்து, பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி என அண்மையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹாலிவுட் நடிகர் டிமோதி ஹட்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என முன்னாள் மாடல் அழகியும், நடிகையுமான செரா ஜான்ஸ்டன் கூறியுள்ளார்.

எது உண்மை

எது உண்மை

இந்த விவகாரத்தில், ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் டிமோதி ஹட்டன், தனது கண்டனங்களையும், மறுப்புகளையும் தொடர்ந்து, மீடியா முன் வைத்து வருகிறார். செராவும் தன்னிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்து வருகிறார். இவர்களில் யார் சொல்வது உண்மை என்பது கோர்ட் மூலமாக விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X