»   »  கர்ப்பமாக இருப்பது இவ்வளவு கஷ்டமா இருக்கே.. செல்லமாக அலுத்துக் கொள்ளும் கிம்!

கர்ப்பமாக இருப்பது இவ்வளவு கஷ்டமா இருக்கே.. செல்லமாக அலுத்துக் கொள்ளும் கிம்!

By Sudha
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: கர்ப்பிணியானபோது சந்தோஷப்பட்டேன். ஆனால் அது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் கிம் கர்தஷியான்.

இதுவரை கவர்ச்சியின் பிடியில் சிக்கி வலம் வந்த கிம் கர்தஷியான் தற்போது தாய்மையின் பிடியில் சி்ககுண்டுள்ளார். அழகான குழந்தையை சுமந்தபடி பூரிப்புடன் வலம் வரும் கிம் கர்ப்ப கால அனுபவம் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

32 வயதான கிம்முக்கு இது முதல் குழந்தையாகும். காதலர் கென்யே வெஸ்ட்டுக்கும், அவருக்கும் பிறக்கும் முதல் குழந்தையுமாகும். கிம் கூறுவதைக் கேளுங்களேன்...

புள்ளத்தாச்சியா இருப்பது கஷ்டம்தான்...

புள்ளத்தாச்சியா இருப்பது கஷ்டம்தான்...

கர்ப்பமாக இருப்பது கஷ்டமாக இருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு சிரமமாக இருக்கும் என்றும் நான் நினைத்துப் பார்க்கவில்லை.

எப்படித்தான் சமாளித்தாரோ அம்மா

எப்படித்தான் சமாளித்தாரோ அம்மா

எனது தாயாருக்கு எத்தனை குழந்தைகள்.. ஒரு குழந்தைக்கே நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன். எனது தாயார் எப்படித்தான் என்னையும், எனது சகோதரிகளையும் பெற்றெடுத்தாரோ... அவர் உண்மையிலேயே கிரேட்தான்.

கர்ப்பம் வலி நிறைந்ததுதான்

கர்ப்பம் வலி நிறைந்ததுதான்

கர்ப்பம் என்பது நிச்சயம் வலி நிறைந்ததுதான். எனக்கும் அந்த அவஸ்தை வலியைத் தருகிறது.

ஆக்டிவாக இருக்க முயல்கிறேன்

ஆக்டிவாக இருக்க முயல்கிறேன்

இருந்தாலும் நான் இதையும் தாண்டி ஆக்டிவாக இருக்க முயல்கிறேன். ஆக்டிவாகத்தான் இருக்கிறேன் என்றும் நினைக்கிறேன். வாரம் முழுவதும் வழக்கம் போல பணியாற்றுகிறேன். ஒரு நாள் மட்டும் பிரேக் எடுத்துக் கொள்கிறேன்.

சாக்லேட் தர மாட்டேங்கிறாங்கப்பா

சாக்லேட் தர மாட்டேங்கிறாங்கப்பா

எனக்கு சாக்லேட், ஸ்வீட் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் சாப்பிடக் கூடாது என்று கூறி விட்டார்கள். ஒரு சாக்லேட் கூட தர மாட்டேங்கிறாங்க என்றார் கிம்.

ஜூலையில் பிள்ளை பிறக்கும்

ஜூலையில் பிள்ளை பிறக்கும்

ஜூலை மாதம் கிம்முக்கு குழந்தை பிறக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம். அவருக்கு மாதம் ஒருமுறை உரிய பரிசோதனைகளும் செய்யப்படுகின்றனவாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Kim Kardashian said that pregnancy has been much tougher than she had anticipated it to be, at the Atlanta premiere of Tyler Perry‘s Temptation: Confessions of a Marriage Counselor on Saturday. The 32-year-old reality star told E! that being pregnant is not as easy as her sister Kourtney or her mother Kris Jenner had made it look.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more