நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட போட்டோ ஷேர் செய்த பிரபல நடிகை.. பதறும் ரசிகர்கள்!
மும்பை: பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் பதறியுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியானார் பிரியங்கா சோப்ரா.
தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்துள்ளார். ஏராளமான விருதுகளை குவித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

ஹாலிவுட்டிலும் பிஸியாக உள்ள பிரியங்கா
பாலிவுட் மட்டுமின்றி மேற்கிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஹாலிவுட்டிலும் கால் பதித்த பிரியங்கா சோப்ரா, பல ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதோடு அமெரிக்க சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

2018ல் பிரியங்கா நிக் திருமணம்
தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கணவருடன் நேரத்தை செலவழிப்பதற்கும் தயங்குவதில்லை.

மோசமாக உடை - ரசிகர்கள் குஷி
அதோடு அவ்வப்போது அரைகுறை ஆடையில் தோன்றி ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா வெளியே வருகிறார் என்றாலே ரசிகர்களுக்கு குஷிதான். அந்த அளவுக்கு மோசமாக உடை உடுத்தி வருகிறார். மேலும் தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் ஷேர் செய்து கதறவிட்டு வருகிறார்.

லண்ட்ன் வெப் சீரிஸ் சிட்டாடல்
அமெரிக்காவில் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது லண்டனிலும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். டின்ஸர் நகரில் பரபரப்பான நடிகைகளில் ஒருவராக பிரியங்கா சோப்ரா உள்ளார். நாட் இட் ரொமான்டிக் போன்ற திரைப்படங்களில் அவரது மூச்சடைக்கக்கூடிய தோற்றங்களைத் தவிர, பிரியங்கா லண்டனில் தனது முதல் வெப்சீரிஸான சிட்டாடல் படப்பிடிப்பிற்காக முகாமிட்டுள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் பிரியங்கா சோப்ரா
இந்த வெப் சீரிஸில் பிரபல நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பெட்ரோ லியாண்ட்ரோ ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த வெப் சீரிஸ் தொடர்பான பல்வேறு போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு ஆன்-செட் படங்களில், பிரியங்கா துப்பாக்கியுடன் படு பிஸியாக உள்ளார். ஆனால் நடிகை இப்போது செட்டில் இருந்து மற்றொரு படத்தை பகிர்ந்துள்ளார்.

நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட
அதில் அவரது நெற்றியில் வெட்டு ஏற்பட்டு புருவத்தில் ரத்தம் சொட்டுகிறது. மேலும் கன்னத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு மற்றொரு பக்கம் கீழே விழுந்ததில் நடிகை பிரியங்கா சோப்ராவின் கன்னம் மற்றும் காதில் சேரும் மண்ணும் ஒட்டியுள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா "வேலையில் குழப்பமான நாள். நீங்கள் அவளை சந்திப்பதற்கு காத்திருக்க முடியாது! #சிட்டாடல்" என குறிப்பிட்டுள்ளார்.

முகத்தில் சேரும் சகதியுமாய் பிரியங்கா
பிரியங்காவின் படம் கண்டிப்பாக அனைவரையும் கவர்ந்தாலும், மிண்டி கெய்லிங்கின் வேடிக்கையான ஆனால் அதற்கு தொடர்புடைய கருத்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. மிண்டி பதிவிட்டிருப்பதாவது, "இது ஒரு புதிய ஒப்பனை என்று நீங்கள் கூறலாம், நான் உண்மையில் என் முகத்தில் சேற்றை வைப்பேன் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் பிரியங்காவின் முகத்தில் இருப்பது நிஜமான சேர்தான் என தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











