»   »  'ஹாலிவுட்ல இப்படித்தான் நடந்துக்கணும்' தீபிகாவுக்கு கிளாஸ் எடுக்கும் பிரியங்கா சோப்ரா

'ஹாலிவுட்ல இப்படித்தான் நடந்துக்கணும்' தீபிகாவுக்கு கிளாஸ் எடுக்கும் பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று வெற்றிக்கொடி நாட்டிய முதல் நடிகை என்ற பெருமை பிரியங்கா சோப்ராவிற்கு உண்டு.

தற்போது இன்னொரு புதிய பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற நடிகை தீபிகா படுகோனேவிற்கு நல்ல குருவாகவும் பிரியங்கா மாறியிருக்கிறார்.

ஆமாம் பாலிவுட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தீபிகாவிற்கு கிளாஸ் எடுத்து அவரைக் காப்பாற்றி வருகிறார் பிரியங்கா.

பாஜிரோவ் மஸ்தானி

பாஜிரோவ் மஸ்தானி

பாஜிரோவ் மஸ்தானி படத்தில் நடித்தபோது பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே இருவருக்கும் நல்ல நட்பு உண்டாகியிருக்கிறது. அப்படியே நாளடைவில் த்ரிஷா- நயன்தாரா போல நெருங்கிய தோழிகளாகவும் மாறிவிட்டார்களாம். ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான பாஜிரோவ் மஸ்தானி உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டியது.

குவாண்டிகோ

குவாண்டிகோ

அமெரிக்காவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் சுமார் 42 மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் குவாண்டிகோ தொலைக்காட்சித் தொடரின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் அமெரிக்கர்களின் மனங்கவர்ந்த முதல் தெற்காசிய நடிகை என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்தது.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

பிரியங்காவைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனேவும் ஹாலிவுட்டிற்கு பிளைட் பிடித்து வின் டீசல் படத்தில் நடித்து வருகிறார். வின் டீசல் படத்தைத் தொடர்ந்து ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் பிராட்பிட்டுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்திருக்கிறது.

அழகிய தோழிகள்

அழகிய தோழிகள்

இந்நிலையில் ஹாலிவுட்டில் எப்படி நடந்து கொள்வது? என்று தீபிகாவிற்கு, பிரியங்கா சோப்ரா கற்றுக் கொடுத்து வருகிறாராம். எப்படி நடந்து கொள்வது, அடுத்து என்ன செய்யலாம், பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளும் விதம் போன்ற பல்வேறு விஷயங்களை தீபிகாவிற்கு பிரியங்கா சொல்லிக் கொடுத்திருக்கிறார். மேலும் இருவரும் சேர்ந்து அடிக்கடி தங்கள் எதிர்காலம் குறித்தும் கலந்துரையாடி வருகிறார்களாம். இவர்களின் நட்பைப் பார்த்து பாலிவுட் உலகம் ஆச்சர்யத்தில் மூழ்கியிருப்பதாகத் தகவல்.

ராக் படத்தில்

ராக் படத்தில்

ஹீரோ ட்வெயின் ஜான்சான் (குத்துச் சண்டை வீரர் ராக்) நடிக்கும் பே வாட்ச் ஹாலிவுட் படத்தில், வில்லியாக பிரியங்கா சோப்ரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
How to Behave in Hollywood? Priyanka Chopra Guide to Deepika Padukone and giving some Free Advice Also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil