»   »  ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்!

ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் அடுத்த பிரமாண்ட படமான 2.ஓ புரமோஷன் ஹாலிவுட்டில் தொடங்கிவிட்டது.

ஒரு பக்கம் ரஜினி உருவம், மறுபக்கம் படத்தின் டிசைன் பொறிக்கப்பட்ட ராட்சத ஹாட் ஹேர் (வெப்பக் காற்று) பலூனை ஹாலிவுட் லோகோ பதிக்கப்பட்ட மவுன்ட் லீ என்ற மலைச் சிகரத்துக்கு எதிரே பறக்க விட்டுள்ளனர்.

ஒரு தமிழ்ப் படத்துக்காக இப்படி ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது அமெரிக்கர்கள் சுவாரஸ்யத்துடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

லைகா பிரமாண்டம்

லைகா பிரமாண்டம்

ரூ 400 கோடி செலவில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் புதிய படம் ‘2.ஓ'. இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் பாலிவுட் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

புரமோஷன்கள்

புரமோஷன்கள்

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 100 அடி உயர வெப்பக் காற்று பலூன்களில் ரஜினி உருவம் மற்றும் 2.ஓ லோகோவை பதித்து பறக்க விட முடிவு செய்தனர்.

ஹாலிவுட்டில்

ஹாலிவுட்டில்

இந்நிலையில், வெப்பக்காற்று பலூனில் 2.ஓ படத்தின் விளம்பரங்களை அச்சடிக்கும் பணி முடிவடைந்து, நேற்று பலூனை பறக்கவிடுடும் முன்னோட்ட நிகழ்ச்சி நடந்தது.

ராஜு மகாலிங்கம்

ராஜு மகாலிங்கம்

இந்த முன்னோட்டத்தில் கலந்து கொண்ட லைகா நிர்வாகி ராஜு மகாலிங்கம், பலூனில் ஏறி பறந்த காட்சியும், அதன் புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அனுமதிக்காக

அனுமதிக்காக

தற்போது, இப்பலூன்களை பறக்கவிட வானிலை மையத்தின் அனுமதிக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். அனுமதி கிடைத்த பின்னர், இப்பலூன்கள் ஹாலிவுட்டில் பறக்கும் எனத் தெரிகிறது.

English summary
Hot air Balloons for the promotions of Rajinikanth's 2.O are ready to fly in Hollywood.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil