twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாம் க்ரூஸ் வெயிட்டிங்.. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஷூட்டிங்.. களத்தில் குதித்த ரஷ்யா!

    By
    |

    மாஸ்கோ: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஷூட்டிங் நடத்த ரஷ்யாவும் களத்தில் இறங்கியுள்ளது.

    சர்வதேச விண்வெளி மையத்தில், ஆவணப்படங்களுக்கான காட்சிகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன.

     நேற்று அனிதா.. இன்று ரியோ.. பால் டாஸ்க்கில் கட்டம் கட்டப்படும் ஆரி.. அதிரடி புரமோ! நேற்று அனிதா.. இன்று ரியோ.. பால் டாஸ்க்கில் கட்டம் கட்டப்படும் ஆரி.. அதிரடி புரமோ!

    ஆனால், முழுத் திரைப்படம் எடுக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் இப்போது நடந்து வருகின்றன.

    விண்வெளி ஆய்வு

    விண்வெளி ஆய்வு

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஹாலிவுட் ஹீரோ டாம் க்ரூஸ் நடிப்பில் விண்வெளியில் படமாக்கப்படும் முதல் திரைப்படத்தை எடுக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. அதன் ஷூட்டிங் அங்கு நடந்தால், விண்வெளி ஆய்வு
    மையத்தில் நடத்தப்பட்ட முதல் ஹாலிவுட் படமாக அது இருக்கும் எனவும் கூறப்பட்டது

    ரஷ்யாவும் களத்தில்

    ரஷ்யாவும் களத்தில்

    இந்தப் படத்துக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் அவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவும் விண்வெளி ஆய்வு மையத்தில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளது. சேனல் ஒன் என்ற நிறுவனம் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான (Roscosmos) ரோஸ்கோஸ்மோஸுடன் இணைந்து சேலஞ்ச் என்ற படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

    தொழில் முறை

    தொழில் முறை

    இதற்காக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஒரு நடிகையை அங்கு அனுப்பும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கான நடிகை தேர்வு நடந்து வருகிறது. தொழில் முறை நடிகர்களாக இருக்க வேண்டியதில்லை. 25 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    யுரி போரிசோவ்

    யுரி போரிசோவ்

    புதியவர்களாக இருக்கலாம். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ரஷ்யர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் பற்றி, ரஷ்ய துணை பிரதமர் யுரி போரிசோவ் கூறும்போது, தனியார் நிதியுதவியை பெற முடிந்தால், அந்த படத்தின் படப்பிடிப்பு விண்வெளி ஆய்வு மையத்தில் நடக்கும்.

    ஸ்பான்சர்ஸ் தேவை

    ஸ்பான்சர்ஸ் தேவை

    நடிகர்கள் அங்கு தங்கி படப்பிடிப்பை நடித்த ஸ்பான்சர்ஸ் தேவை. அது கிடைத்தால், விண்வெளி ஆய்வுக்கு தொந்தரவு இல்லாமல் படமாக்கலாம் என்று கூறியுள்ளார். அவர் கூற்றுப்படி நடந்தால் விண்வெளி ஆய்வு மையம், உயரமான சினிமா ஸ்டூடியோவாக மாறக்கூடும். அங்கு நடக்கும் முதல் படமாக இந்த சேலஞ்ச் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Russia set to make movie IN SPACE – as long as actors get private funding to go into orbit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X