»   »  ஆஸ்கர் விழாவில் ஏன் அந்த நக்கல் சிரிப்பு?: நடிகர் விளக்கம்

ஆஸ்கர் விழாவில் ஏன் அந்த நக்கல் சிரிப்பு?: நடிகர் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் நக்கலாக சிரித்தது குறித்து ஹாலிவுட் நடிகர் ரயன் கோஸ்லிங் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கடைசியாக சிறந்த படத்திற்கான விருதை வழங்கினார்கள். சிறந்த படத்திற்கான விருதுக்கு மூன்லைட் தேர்வானது.

Ryan Gosling explains why he laughed during Oscars mix-up

விருதை அறிவிக்கும் கவரில் தவறான கார்டு இருந்ததால் முதலில் லா லா லேண்ட் படத்திற்கு விருது அளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த விருதை வாங்கி மூன்லைட் குழுவிடம் அளித்தார்கள்.

இந்த சம்பவத்தின்போது லா லா லேண்ட் ஹீரோ ரயன் கோஸ்லிங் நக்கலாக சிரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில் அந்த புகைப்படம் குறித்து ரயன் தற்போது கூறுகையில்,

மேடையில் ஆளாளுக்கு பரபரப்பானதால் யாருக்கோ காயம் ஏற்பட்டுவிட்டது என்று நினைத்தேன். அதன் பிறகு உண்மை தெரிய வந்து நிம்மதி அடைந்து சிரித்தேன் என்றார்.

English summary
Actor Ryan Gosling has explained why he was caught giggling during the Oscars mix-up which saw 'La La Land' mistakenly being announced as the best picture winner over 'Moonlight'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil