»   »  நைசா உஷார் பண்ண முயன்ற டிரம்ப்: அசிங்கப்படுத்திய பிரபல நடிகை

நைசா உஷார் பண்ண முயன்ற டிரம்ப்: அசிங்கப்படுத்திய பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹாலிவுட் நடிகை தனது காதலருடன் இருந்தபோதே அவரை உஷார் செய்ய முயற்சித்துள்ளார் டொனால்டு டிரம்ப்.

அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு டொனால்டு டிரம்ப் பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக்காக இருந்துள்ளார். ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் குள்ளமாக இருப்பதால் அவரை தான் நிராகரித்ததாக டிரம்ப் முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் டிரம்பின் முகத்திரையை கிழித்துள்ளார் சல்மா ஹயக். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

காதலர்

காதலர்

நிகழ்ச்சி ஒன்றில் நான் என் அப்போதைய காதலருடன் அமர்ந்திருந்தபோது பின்னால் இருந்து ஒருவர் என் மீது கோட்டை போட்டார். திரும்பிப் பார்த்தால் டிரம்ப் அமர்ந்திருந்தார்.

டிரம்ப்

டிரம்ப்

என் காதலரோ டிரம்பை பார்த்து ஹலோ சொன்னார். உடனே டிரம்போ, சாரி உங்கள் காதலியா? குளிரால் நடுங்கினார் அதனால் என் கோட்டை அவர் மீது போர்த்தினேன் என்றார்.

டின்னர்

டின்னர்

அன்றிரவு டின்னருக்கு என்னையும், என் காதலரையும் அழைத்தார் டிரம்ப். டின்னரின்போது அவர் என் காதலருடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். இறுதியில் எங்கள் செல்போன் எண்களை கேட்டு வாங்கிக் கொண்டார். அதன் பிறகு அவர் என் காதலருடன் பேசவே இல்லை.

டேட்

டேட்

டிரம்ப் எனக்கு போன் செய்து டேட்டிங் வருமாறு கூப்பிட்டார். எனக்கு காதலர் இருக்கிறார் என்றேன். அதற்கு அவரோ, உங்கள் காதலர் பெரிய ஆளே இல்லை, நீங்கள் என்னுடன் தான் வெளியே செல்ல வேண்டும் என்றார். நான் மறுத்துவிட்டேன் என்று சல்மா தெரிவித்துள்ளார்.

பொய்

பொய்

சல்மா ஹயக்கை தான் நிராகரித்ததாக கூறினார் டிரம்ப். இந்நிலையில் டிரம்பின் முகத்திரையை கிழித்து அவர் ஒரு பொய்க்கோழி என்பதை நிரூபித்துள்ளார் சல்மா.

English summary
Hollywood actress Salma Hayek said that it was not Donald Trump who rejected her but she rejected him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil