»   »  ஆஸ்கர் ரேஸில் 9 பரிந்துரைகளுடன் உயரப் பறக்கும் பேர்ட்மேன், தி கிராண்ட் புதபெஸ்ட் ஹோட்டல்

ஆஸ்கர் ரேஸில் 9 பரிந்துரைகளுடன் உயரப் பறக்கும் பேர்ட்மேன், தி கிராண்ட் புதபெஸ்ட் ஹோட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பேர்ட்மேன் மற்றும் தி கிராண்ட் புதபெஸ்ட் ஹோட்டல் ஆகிய படங்கள் தலா 9 பரிந்துரைகளுடன் முன்னணியில் உள்ளன.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருத்துக்கான பரிந்துரை பட்டியல் வியாழக்கிழமை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இல்லை.

87வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் வெஸ் ஆன்டர்சன் இயக்கிய தி கிராண்ட் புதபெஸ்ட் ஹோட்டல் மற்றும் அலெஜான்ட்ரோ கோன்சாலஸ் இனாரிட்டு இயக்கிய பேர்ட்மேன் ஆகிய படங்கள் தலா 9 பரிந்துரைகளுடன் முன்னணியில் உள்ளன.

இமிடேஷன் கேம்

இமிடேஷன் கேம்

தி இமிடேஷன் கேம் படத்திற்கு 8 பரிந்துரைகளும், பாய்ஹுட், அமெரிக்கன் ஸ்னைப்பர் ஆகிய படங்களுக்கு தலா 6 பரிந்துரைகளும், விப்லாஷ், இன்டர்ஸ்டெல்லார், பாக்ஸ்கேட்சர் ஆகிய படங்களுக்கு தலா 5 பரிந்துரைகளும் கிடைத்துள்ளன.

பிராட்லி கூப்பர்

பிராட்லி கூப்பர்

ஹாலிவுட் நடிகர் பிராட்லி கூப்பர் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் ராணுவ வாழ்க்கை பற்றிய படமான அமெரிக்க ஸ்னைப்பரில் நடித்ததற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மெரில் ஸ்ட்ரீப்

மெரில் ஸ்ட்ரீப்

ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் 19வது முறையாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதிக முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகை இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்டு தி உட்ஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதுக்காக மெரில் ஸ்ட்ரீப்பின் பெயர் தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

செல்மா

செல்மா

மார்டின் லூதர் கிங் ஜூனியரின் வாழ்க்கை வரலாற்று படமான செல்மாவுக்கு பல விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் சிறந்த படம் மற்றும் ஒரிஜினில் பாடல் பிரிவுகளில் மட்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

English summary
Birdman and The Grand Budapest hotel are leading the Oscar race with 9 nominations each.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil