»   »  தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைக்க 10 மில்லியன் டாலர்கள் செலவழித்த சார்லி ஷீன்!

தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைக்க 10 மில்லியன் டாலர்கள் செலவழித்த சார்லி ஷீன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைக்க 10 மில்லியன் டாலர் வரை செலவழித்தாக ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் தெரிவித்துள்ளார்.

ஏராளமான ஆபாச நடிகைகளுடன் உறவு கொண்டதால் எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளான பிரபல நடிகர் சார்லி ஷீன், அதனை நேற்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

Sheen paid out $10 Million to keep his illness secret

தனது பேட்டியில், "இனியும் இந்த நோயை மறைக்க விரும்பவில்லை. ஆம்... எனக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உள்ளது. இந்த செய்தியை வைத்து கண்டபடி எழுதுவதைத் தடுக்கவும், அரைகுறை உண்மைகளுடன் பொய்யான செய்தி வலம் வருவதைத் தடுக்கவுமே இந்த அறிவிப்பு.

என் உடல் நிலை குறித்த ஆய்வு முடிவுகளை நான் முழுமையாக நம்பினேன். இந்த விஷயங்கள் தெரிந்தவர்களை என் நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதி, 10 மில்லியன் டாலர் வரை செலவழித்தேன்.

இனி இந்த மாதிரி செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சிறையிலிருந்து நானே வெளிவந்துவிட்டேன்.

ஆனால் என் மூலம் யாருக்கும் எய்ட்ஸ் பரவவில்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். எனக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தும் சில பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் செக்ஸ் வைத்துக் கொண்டது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு எய்ட்ஸ் பரவவில்லை என்பதை எனது டாக்டர்கள் உறுதிப்படுத்திவிட்டனர்," என்றார்.

English summary
Charlie Sheen said he's trusted the diagnosis (HIV positive) with people he thought he could confide in, but has paid out upwards of $10 million to keep the illness a secret.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil