»   »  பாண்ட் பற்றி குறைகூறாமல் வாயை மூடுங்கள்: நடிகர் டேனியல் கிரெய்கிற்கு எச்சரிக்கை

பாண்ட் பற்றி குறைகூறாமல் வாயை மூடுங்கள்: நடிகர் டேனியல் கிரெய்கிற்கு எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஜேம்ஸ் பாண்ட் பற்றி குறை கூறுவதை நிறுத்துவிட்டு வாயை மூடிக் கொண்டிருக்குமாறு ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்கிற்கு சோனி நிறுவன நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனராம்.

ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டர் வரும் 26ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தில் நடித்துள்ள பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் அண்மையில் அளித்த பேட்டி பலரையும் வியக்க வைத்தது. அவர் தனது பேட்டியில் கூறியிருந்ததாவது,

Daniel Craig

மீண்டும் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு கண்ணாடி துண்டால் கையை கிழித்துக் கொள்வேன். தற்போதைக்கு அவ்வளவு தான். நான் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புகிறேன் என்றார்.

அவர் நடித்துள்ள நான்காவது பாண்ட் படம் ஸ்பெக்டர். இந்நிலையில் அவர் பாண்ட் படத்தை பற்றி இப்படி தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. படம் ரிலீஸாக உள்ள நேரத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தனால் தான் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பேட்டி அளித்த பிறகு ஸ்பெக்டரின் ஸ்டுடியோவான சோனிக்கு சென்ற போது அவருக்கு டோஸ் விழுந்ததாம்.

இந்நிலையில் பாண்ட் படங்களை பற்றி குறை கூறுவதை நிறுத்திக் கொண்டு வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு அவருக்கு சோனி நிறுவன நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
Daniel Craig is reportedly warned by the Sony executives to shut up and stop bashing James Bond.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil