For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "வால் ஈ" பார்த்திருக்கீங்களா.. கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய 6 அனிமேஷன் படங்கள்!

  By Manjula
  |

  லாஸ் ஏஞ்செல்ஸ்: கடவுள் நமக்குத் தந்த அழகிய பரிசு நாம் வாழும் இந்த பூமி. ஆனால் நமது பேராசை மற்றும் பொறுப்பின்மையால் நமது அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்வது வறட்சியையும், பசுமையற்ற ஒரு வாழ்க்கையையும்தான்.

  இதனை மாற்றி நமது அடுத்த சந்ததியினரின் மனதில் சுற்றுசூழல் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நமது குழந்தைகளுடன் நாம் நிறைய நேரம் செலவிட்டு அவர்களின் மனதில் இந்தக் கருத்துக்களை ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் உலகைக் கவர்ந்த இந்த 6 அனிமேஷன் படங்களை உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பாருங்கள்.

  இந்த 6 படங்களுமே சுற்றுச் சூழலை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட நல்ல படங்கள் இந்த மாதிரி படங்களைப் பார்ப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் நேரம் செலவு செய்தது போன்றும் இருக்கும், அவர்களின் மனதில் நல்ல கருத்துக்களைப் பதிய வைத்தது போன்றும் இருக்கும்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். என்ன சரிதானே!

  பைண்டிங் நிமோ

  பைண்டிங் நிமோ

  இந்தக் கதையின் ஹீரோ ஒரு குட்டி மீன் அதன் பெயர் நிமோ. சிறிய வயதிலேயே நிமோவின் தாய் மற்றும் சகோதர,சகோதரிகளை ஒரு சுறா மீன் கொன்று விட, நிமோவின் தந்தை நிமோவை பொத்திப் பொத்தி வளர்க்கிறார். இதனால் மற்றவர்களின் கேலி,கிண்டலுக்கு ஆளாகும் நிமோ அடம்பிடித்து ஒரு பள்ளியில் சேருகிறது. பள்ளியில் இருந்து ஒரு பிக்னிக் செல்லும் பொழுது மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சாகசம் செய்து ஒரு மீனவனின் வலையில் மாட்டிக் கொள்கிறது. நிமோவை அதன் தந்தை எப்படிக் காப்பாற்றினார் என்பது மீதிக் கதை. இந்தக் கதையில் கடல் மற்றும் அதனைச் சார்ந்த இடங்களை ஆற்று நீரின் கழிவுகளும், மற்ற நமது செயல்களும் நீருக்கடியில் வாழும் கடல் சார்ந்த உயிரினங்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை ரொம்ப அருமையாகச் சொல்லியிருப்பார்கள்.

  அவதார்

  அவதார்

  ஜேம்ஸ் கேமரூனின் மெகா ஹிட் படமான அவதாருக்கு அறிமுகம் தேவையில்லை. வேற்றுக் கிரகத்தில் இருக்கும் விலை உயர்ந்த கனிம வளங்களைக் கவர்ந்து போக விரும்பும் அமேரிக்கா அதற்காக ஹீரோவின் ஜீனை எடுத்து குளோனிங் செய்து அவரை அந்தக் கிரகத்திற்கு அனுப்புகிறது.

  காடும் மற்றும் காடு சார்ந்த இடங்களாக பச்சைப் பசேலென்று இயற்கை உயிரினங்கள் பல்கிப் பெருகும் ஒரு இடமாக விளங்கும் கிரகம் அது. அந்த மக்களுடன் அன்பாகப் பழகும் ஹீரோ நாளடைவில் அவர்களில் ஒருவனாக மாறிவிடுகிறான். இதற்கிடையில் அமெரிக்கப் படைகள் அந்தக் கிரகத்தை முற்றுகையிட வரும்போது ஹீரோ அந்தக் கிரகவாசிகளுடன் சேர்ந்து அதனை எதிர்க்கிறான். முடிவில் யார் வெல்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ். மனிதனுக்கு எவ்வளவு வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் அவன் மனம் மேலும்,மேலும் பலவற்றை விரும்புகிறது. அதன் முடிவு எங்கே கொண்டுபோய் விடும், மற்றும் இயற்கைக்கு எதிராக அவை எப்படி மாறுகின்றன போன்றவற்றை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறும் படம் இது.

  ஹேப்பி பீட்

  ஹேப்பி பீட்

  அண்டார்டிகாவில் வாழும் பெங்குவின்களைப் பற்றிக் கூறும் இந்தப் படத்தில், அந்தப் பனிப் பிரதேசம் நாம் செய்யும் தவறுகளால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைச் சித்தரித்திருப்பார்கள். படத்தில் உலக வெப்பமயமாதல் காரணமாக பனிக் கட்டிகள் உருகுதல், கடல் நீர் மட்டம் அதிகரித்தல் மற்றும் பல அபாயகரமான விளைவுகளை விளக்கும் ஒரு சிறந்த படம் ஹேப்பி பீட்.

  வால் ஈ

  வால் ஈ

  நமது மனிதர்களின் பொறுப்பற்ற செயலால் பூமியில் பல லட்சம் நச்சுப்பொருட்கள் கலந்து உலகமே குப்பை மயமாக மாறிவிட்டது, இதன் பாதிப்பால் மனிதர்கள் இறந்து விட வால் ஈ எனப்படும் ஒரு ரோபோ இந்தக் கழிவுகளை அகற்றும் வேலையைச் செய்கிறது. தனியாக இந்த வேலையை செய்து வரும் வால் ஈ தினமும் ஒரு திரைப்படம் பார்க்கும். அதில் வரும் கதாநாயகி போல தனக்கும் ஒரு நாயகி இல்லையே என அது ஏங்கும்போது அதற்கு ஒரு பெண் ரோபோ கிடைக்க இருவரும் காதல் வயப்படுகிறார்கள். இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்.

  தி லாஸ்ட் ரெயின் பாரஸ்ட்

  தி லாஸ்ட் ரெயின் பாரஸ்ட்

  1992 ல் வெளிவந்த இந்தப் படம் ஆஸ்திரேலியாவில் உள்ள மழைக் காடுகளைப் பற்றிக் கூறுகிறது. மனிதனின் ஆசையால் காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்தக் கதையில் செயற்கை மழைக் காடுகளை உருவாக்கி அதன் மூலம் இயற்கையைப் பாதுகாப்பது போல காட்சிகளை அமைத்துள்ளனர். காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் பறவைகள் ஏன் மனிதர்களும் துன்பப்படுவதைக் கூறும் படமாக தி லாஸ்ட் ரெயின் பாரஸ்ட் அமைந்துள்ளது.

  ஓவர் தி ஹெட்ஜ்

  ஓவர் தி ஹெட்ஜ்

  விலங்குகள் வாழும் ஒரு காட்டில் உள்ள அடர்ந்த பகுதியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது, மனிதர்கள் மரங்களை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துச் செல்ல, காடுகள் கண்முன்னே அழிந்து அவை விலங்குகளின் வாழ்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதே படத்தின் கதை. இன்று நாம் அனைவரும் செய்யும் தவறை படத்தில் அச்சு அசலாகக் சுட்டிக் காட்டியிருப்பார்கள். மனிதர்கள் செய்யும் தவறால்தான் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன என்ற நவீன உண்மையை எடுத்துக் கூறும் படம்தான் இந்த ஓவர் தி ஹெட்ஜ்.

  English summary
  God's greatest gift to the race residing on the earth is its flora and fauna. But given the current situation of the green planet, it is pretty evident that we could not handle it with care. So much so that we have earmarked a day - World Environment Day - to remember how we have destroyed our surrounding and by extension, our future. Here are six animation films you must show your kids to make them understand the need to preserve and protect planet earth.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X