»   »  உலகம் முழுவதும் 543 மில்லியன் டாலர்களை வசூலித்த ஸ்பெக்டர்... இன்னும் 3 தினங்களில் இந்தியாவிலும்

உலகம் முழுவதும் 543 மில்லியன் டாலர்களை வசூலித்த ஸ்பெக்டர்... இன்னும் 3 தினங்களில் இந்தியாவிலும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: டேனியல் கிரெய்க் நடிப்பில் வெளியான ஸ்பெக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 543 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் 24-வது படமாக வெளியாகி இருக்கும் இப்படம் உலகம் முழுவதும் வசூலில் பயங்கரமாக கல்லா கட்டி வருகிறது.

Spectre Collects more than 543 Million

இன்னும் 3 தினங்களில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் இப்படத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1.ஸ்கைபால் படத்திற்குப் பின்னர் 3 வருடம் கழித்து வெளிவந்திருக்கும் ஜேம்ஸ்பாண்ட் படம் தான் இந்த ஸ்பெக்டர். ஸ்கைபால் படத்தை இயக்கிய சாம் மென்டிஸ் தான் ஸ்பெக்டர் படத்தையும் இயக்கி இருக்கிறார்.

2.ஸ்பெக்டர் படத்துக்காக நான்காவது முறையாக பாண்ட் அவதாரம் எடுத்திருக்கிறார் டேனியல் கிரேய்க். சில மாதங்களுக்கு முன்புவரை இதுதான் டேனியலின் கடைசி பாண்ட் படம் என செய்திகள் வெளியாகின. டேனியல் கிரெய்க்கும் இதனை ஒப்புக் கொண்டார் இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டால் அடுத்ததாக ஒரு படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தை ஏற்று கடைசியாக பாண்ட் படங்களுக்கு முழுக்குப் போடுகிறார் டேனியல் கிரெய்க்.

3.'பாண்ட் படத்தில் நடிப்பதற்குப் பதிலாக எனது மணிக்கட்டை நானே அறுத்துக் கொள்வேன்' இது டேனியல் கிரெய்க் உதிர்த்த தத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது.

4.இந்தப் படத்திற்காக சுமார் 240 கோடி மதிப்புள்ள கார்கள் நிஜமாகவே எரிக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டது. டேனியல் கிரெய்க்குடன் இணைந்து லியா சீடவுக்ஸ், மோனிகா பெல்லுச்சி,கிறிஸ்டோப் வால்ட்ஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

5.கிறிஸ்டோப் வால்ட்ஸ் 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்த நடிகர் ஜேம்ஸ்பாண்ட்டின் வில்லனாக நடிக்க இயக்குனரின் கெஞ்சல்களுக்குப் பின்னர்தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

6.2 நாயகிகளும் ஜேம்ஸ்பாண்ட்டிற்கு இணையான வில்லனும் இருப்பதால் ஸ்பெக்டர் படத்தில் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது.

7.150 - 200 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட ஸ்கைபால் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1109 மில்லியன் டாலர்களை குவித்திருந்தது. 245 - 250 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட ஸ்பெக்டர் வெளியான 3 வாரங்களில் இதுவரை 538 மில்லியன் டாலர்களை குவித்திருக்கிறது.

8.இந்தியாவில் 20 ம் தேதி வெளியாகும் இப்படம் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதால் இங்கும் கல்லா கட்டுவதில் எந்தக் குறையும் இருக்கப் போவதில்லை.

9.ஜப்பான் மற்றும் சவுத் ஆப்ரிக்காவில் 27ம் தேதியில் வெளியாகும் ஸ்பெக்டர், ஜப்பானில் 4ம் தேதி வெளியாகிறது.

எது எப்படியோ பாக்ஸ் ஆபீஸில் எந்தப் படமும் நிகழ்த்தாத சாதனையை ஸ்பெக்டர் நிகழ்த்தும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்கப்போவதில்லை!

English summary
Daniel Craig Starrer Spectre Movie Collects more than 543 Million Dollars at Worldwide Box Office. November 20th Spectre to Hit Screens in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil