»   »  சென்னையில் முதல்முறையாக ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் ஸ்பெக்டர்

சென்னையில் முதல்முறையாக ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் ஸ்பெக்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முதல்முறையாக ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கும் படம், என்ற பெருமையை தட்டிச் செல்லப்போகிறது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஒன்றான ஸ்பெக்டர்.

வேளச்சேரி ஜாஸ் சினிமாஸில் வருகின்ற 20 ம்தேதி முதல் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படங்களை திரையிட இருக்கின்றனர். படம் பார்க்கும்போது நமக்கு அந்த உணர்வை நிஜமாக அளிக்கக் கூடிய ஐமேக்ஸ் திரையரங்கில் எல்லாமே பெரிதாகத்தான் இருக்கிறது.

Spectre Movie in Chennai IMAX

வழக்கத்தை விட அதிகமான திரை மற்றும் துல்லியமான அதிரடிக்கும் ஒலி என்று சினிமாவை ரசிப்பவர்களுக்கு இந்த அனுபவம் நிச்சயம் பரவசத்தை அளிக்கும் என்று உறுதி கூறுகின்றனர்.

உலகெங்கும் வெளியாகி வெற்றிவாகை சூடிய ஸ்பெக்டர் திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியாகிறது. இந்தப் படத்தை சென்னை ஜாஸ் மாலில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் முதன்முறையாக திரையிடவிருக்கின்றனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் அதிரடியுடன், ஐமேக்ஸ் தொழில்நுட்பமும் சேர்வதால் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஒருவேளை நீங்கள் இங்கு படம் பார்க்கக் செல்லும் பட்சத்தில் உங்கள் வழக்கமான பணத்தை விட 3 மடங்கு அதிகமாக ஒதுக்க நேரிடும்.

ஒரு டிக்கெட்டின் விலை 360 ரூபாய் இதையே நீங்கள் 3டி முறையில் பார்த்தால் இன்னும் 30 ரூபாய் அதிகம். இதைவிடவும் நீங்கள் இருந்த இடத்திலேயே முன்பதிவு செய்யக்கூடிய இணையதளத்தில் இதைவிடவும் கட்டணம் அதிகமாக இருக்குமாம்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒரு டிக்கெட்டின் விலை 430 ரூபாய், என்ன சொல்லும்போதே தலைய சுத்துதா? அதுக்குப் பேருதான் ஐமேக்ஸ்!

English summary
First IMax Theater Opened in Chennai Velachery, Coming Friday Spectre Film Screened on this Theater.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil