»   »  ஸ்பெக்டர்: ஒரு முத்தக்காட்சிக்கு இத்தனை அக்கப்போரா... கொந்தளிக்கும் வலைதளவாசிகள்

ஸ்பெக்டர்: ஒரு முத்தக்காட்சிக்கு இத்தனை அக்கப்போரா... கொந்தளிக்கும் வலைதளவாசிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜேம்ஸ்பாண்ட் படங்களின் உயிர்நாடியே படத்தில் இடம்பெறும் முத்தக் காட்சிகள்தான் அதைப் போய் கத்தரித்து விட்டீர்களே என்று சமூக வலைதளவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.

டேனியல் கிரெய்க் நடிப்பில் நாளை இந்தியாவில் வெளியாகும் ஸ்பெக்டர் படத்தில் சில முத்தக் காட்சிகளை இந்திய சென்சார் அதிகாரிகள் கத்தரித்து விட்டனர்.

இதனால் கொந்தளித்த ரசிகர்கள் டேனியல் கிரெய்க்கை தங்கள் இஷ்டத்திற்கு இந்தியனைப் போல உருமாற்றியும், நான் நாட்டை விட்டே போகிறேன் என்றும் தங்கள் எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது இணையத்தில் #sanskarijamesbond என்னும் ஹெஷ்டேக் பிரபலமாகி வருகிறது. அவற்றில் இருந்து ஒருசிலவற்றை இங்கே நாம் காணலாம்.

நாடு கடந்து செல்கிறேன்

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் முத்தக்காட்சிகளை பார்ப்பதற்காக நான் வேறு நாட்டிற்கு செல்கிறேன் என்று பியர்லெஸ் தெரிவித்து இருக்கிறார்.

குழந்தைகள் அரைகுறையாக

10 வயது கூட நிரம்பாத குழந்தைகள் அரைகுறையாக உடை அணிந்து நடனமாடுவதை ஒத்துக் கொள்ளும் இந்தியன் சென்சார் போர்டினர் ஜேம்ஸ்பாண்ட் முத்தக்காட்சிகளை தடை செய்கின்றனர். என்ன கொடுமை சார் இது என்று நியாயமான ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் ஜோதிஸ் ஜாய்.

பட்டையடித்த ஜேம்ஸ்பாண்ட்

ஜேம்ஸ்பாண்ட்டிற்கு மீசை வைத்து, பட்டையடித்தது மட்டுமின்றி நெற்றியில் நாமம் வேறு போட்டு விட்டிருக்கிறார் இந்த குறும்புக்காரர். என்ன தர்ஷன் இப்படிப் பண்றீங்களே!

தொலைக்காட்சி தொடர்களை

சென்சார் போர்டினர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் தொடர்களை முதலில் ஒழுங்குபடுத்துங்கள் என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார் பிரவீன் ஜேம்ஸ்.

ஒரு முத்தக்காட்சிக்கு

ஒரு முத்தக்காட்சிக்கு இத்தனை அக்கப்போரா சென்சார் போர்டு இதனை ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் கீர்த்தனாவின் கேள்வியிது.

பின்னணியில் காயத்ரி மந்திரம்

ஜேம்ஸ்பாண்ட் தீவிரமான பணியில் ஈடுபட்டிருக்கும் போது பின்னணியில் காயத்ரி மந்திரம் ஒலிக்கும் ராகுல் ராமச்சந்திரனின் குறும்பான பதிவிது.

காலையில் எழுந்து

ஜேம்ஸ்பாண்ட் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து பூஜை புனஸ்காரங்களை கடமை தவறாமல் செய்வார் ப்ரீடியூன் ப்ரைம் கிண்டல் செய்திருக்கிறார்.

கடைசில ஜேம்ஸ்பாண்ட்டையும் நம்ம பசங்க விட்டு வைக்கலையே!

English summary
Now The Spectre James Bond 007 Turned a New Avatar, After the Indian Censor Board Officers Cuts Kissing Scenes Short.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil