»   »  8418 லிட்டர் மண்ணெண்ணைய் ஊற்றி.. 68 டன் வெடிபொருளை வெடிக்க வைத்து.. "ஸ்பெக்டாக்குலர்" ஸ்பெக்டர்!

8418 லிட்டர் மண்ணெண்ணைய் ஊற்றி.. 68 டன் வெடிபொருளை வெடிக்க வைத்து.. "ஸ்பெக்டாக்குலர்" ஸ்பெக்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் படம் என்றாலே சாதனைக் குவியல்தான் அதிகமாக இருக்கும். தொட்டதெல்லாம் சாதனை என்பதுதான் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரலாறு. அந்த வரலாற்றை லேட்டஸ்ட் படமான ஸ்பெக்டரும் தொடர்ந்துள்ளது.

ஸ்பெக்டர் படத்தின் ஒரு ஆக்ஷன் காட்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலக திரைப்பட வரலாற்றில் இடம் பெற்ற மிகப் பிரமாண்டமான வெடிக் காட்சி இது என்று கின்னஸ் அமைப்பு கூறியுள்ளது.

உண்மையிலேயே பிரமாண்டமான வெடிவிபத்து காட்சிதான் பாஸ்.. ஏகப்பட்ட மெனக்கெடல்களுக்கு கிடைத்த பலனாக இந்தக் காட்சி இன்று வரலாறு படைத்துள்ளது.

பிரமாண்ட வெடிப்பு

பிரமாண்ட வெடிப்பு

இந்த சண்டைக் காட்சி .. சண்டைக் காட்சி என்பதை விட பிரமாண்ட வெடிவிபத்துக் காட்சி இது. கிளைமேக்ஸில் இடம் பெறுகிறது இந்தக் காட்சி. இதற்காக நிறைய செலவிட்டுள்ளனர்.

மிக நீளமான வெடிப்பு

மிக நீளமான வெடிப்பு

உலக சினிமாக்களிலேயே இதுதான் மிகப் பெரிதான, நீளமான வெடிப்புக் காட்சி என்று இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பாண்ட் படங்களில் 24வது படம்தான் ஸ்பெக்டர்.

மொராக்காோவில் நடந்த வெடிப்பு

மொராக்காோவில் நடந்த வெடிப்பு

இந்த பிரமாண்ட வெடி விபத்துக் காட்சியை மொராக்கோவில் உள்ள எர்போட் என்ற இடத்தில் படம் பிடித்துள்ளது பாண்ட் படக் குழு.

8418 லிட்டர் மண்ணெண்ணெய்

8418 லிட்டர் மண்ணெண்ணெய்

இந்தக் காட்சியில் 8418 லிட்டர் மண்ணெண்ணெய், 33 கிலோ வெடி பொருள் பவுடர் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த அளவையும் கணக்கிட்டால் அது 68.47 டன் டிஎன்டி வெடிபொருளுக்கு சமமாகுமாம்.

அட!

அட!

ஆனால் இந்த பிரமாண்ட வெடிகுண்டு வெடிப்பை படத்தில் வெறும் 7.5 விநாடிதான் காண முடியும். அதற்குத்தான் இத்தாம் பெரிய வெடிப்பை அரங்கேற்றி பிரமாண்டப்படுத்தியுள்ளனர் ஸ்பெக்டர் குழுவினர்.

பாண்ட்.. இந்தாங்க சர்ட்டிபிகேட்

பாண்ட்.. இந்தாங்க சர்ட்டிபிகேட்

கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை பட நாயகன் டேணியல் கிரேக், லியா செய்டோ, தயாரிப்பாளர் பார்பரா புரோக்கோலி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சீனாவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.

English summary
The latest installment in the James Bond franchise has set the Guinness world record for the world's largest film stunt explosion ever. The blast is part of an especially climactic scene in the 24th Bond film Spectre.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil