‘Spider man : No way Home’ திகைப்பூட்டும் டிரைலர் வெளியானது... ரசிகர்கள் மகிழ்ச்சி !
சென்னை : Spider man : No way Home' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ஸ்பைடர் மேன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' படத்தில் ஜெண்டயா, மரிசா டோமி, டோனி ரிவோலோரி மற்றும் ஜேக்கப் படாலன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படம் டிசம்பர் 17ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சோனி, மார்வெல்
சோனி மற்றும் மார்வெல் நிறுவனம் இணைந்து தயாரித்த 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இக்கூட்டணி உருவாக்கும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

பேச்சுவார்த்தை
இதையடுத்து, காப்புரிமை தொடர்பாக சோனி மற்றும் மார்வெல் இரு நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவ்விரு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டன. இந்த தகவல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. பின்னர் சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்தையில் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்தன.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் 'Spider man : No way Home' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ஸ்பைடர் மேன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 'ஸ்பைடர்மேன்'படங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் இந்தப் பாகத்திலும் நடித்துள்ளனர். மேலும் டாக்டர் ஆக்டோபஸ் இப்படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது வெளியாகி உள்ள ட்ரைலரில் டாக்டர் ஆக்டோபஸ் கதாபாத்திரமும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Spider man : No way Home
தற்போது வெளியாகி உள்ள டிரைலரில், ஸ்பைடர் மேனின் மார்வெல் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, ஹீரோ முகமூடி அணியாமல் இருக்கிறார். இளம் பீட்டர் பார்க்கர் (டாம் ஹாலண்ட்) மைஸ்டீரியோவை (ஜேக் கில்லென்ஹால்) எடுத்து சென்று விடுகிறார். ஆனால் அவரின் அடையாளம் அனைவருக்கும் தெரிந்து விடுவதால், ஸ்லேட்டை சுத்தம் செய்து, மீண்டும் தொடங்கும் ஒரு ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால், பீட்டர் பற்றிய மக்களின் நினைவுகளை அழிக்க மந்திரத்தை டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் மேற்கொள்கிறார். இதனால் உலகம் பல ஆபத்தான நிகழ்வுகளை சந்திக்கிறது.
திகைப்பூட்டும் டிரைலர்
நீ இரண்டு விதமான வாழ்க்கை வாழ நினைக்கிற, இது தொடர்ந்தால் உனக்கு ஆபத்து அதிகமாகிட்டே இருக்கும் பார்க்கர் என்று ஸ்ட்ரேஞ்ச் குரலில் டிரைலர் முடிவடைகிறது. இந்த டிரைலரே செம சூப்பராக திகைப்பூட்டும் வகையில் உள்ளது. மொத்த பூமியும் மண்ணுக்குள் போவது போலவும், ரயில்கள் அனைத்தும் வனத்தில் அந்தரத்தில் சூழல்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











