Spider man : No way Home Trailer… வெளியான 24 நேரத்தில் அசுர சாதனை !
சென்னை : Spider-Man: No Way Home ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் உலக அளவில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட ட்ரெய்லர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
Avengers: Endgame ட்ரெய்லரை 289 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது அந்த சாதனையை ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் டிரைலர் முறியடித்துள்ளது.
இந்த படத்தை டிசம்பர் 17ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சோனி, மார்வெல்
சோனி மற்றும் மார்வெல் நிறுவனம் இணைந்து தயாரித்த 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இக்கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

பேச்சுவார்த்தை
இதையடுத்து, காப்புரிமை தொடர்பாக சோனி மற்றும் மார்வெல் இரு நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருநிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டன. இந்த தகவல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. பின்னர் சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்தையில் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதை அடுத்து, ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் படத்தை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்தன.

355.5 மில்லியன் பார்வையாளர்கள்
Spider man : No way Home திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ஸ்பைடர் மேன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதைடுத்து ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் ட்ரெய்லர் யூடியூபில் வெளிவந்து உலகம் முழுவதும் 24 மணி நேரத்தில் 355.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் அதிக மக்களால் 24 மணி நேரத்தில் பார்க்கப்பட்ட Avengers: Endgame டிரைலரின் சாதனையை ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் டிரைலர் முறியடித்துள்ளது.

சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன்
இதற்கு முன் வெளியான ஸ்பைடர் Spider-Man: Far From Home டிரெய்லர் 24 மணி நேரத்தில் 135 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டது. ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் டிரைலர் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரெய்லர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இது உலக அளவில் அதிக மக்களால் ரசிக்கப்படும் சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன் என்பதை அனைவருக்கும் உணர்த்தி உள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
கடந்த 'ஸ்பைடர்மேன்'படங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் இந்தப் பாகத்திலும் நடித்துள்ளனர். மேலும் டாக்டர் ஆக்டோபஸ் இப்படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது வெளியாகி உள்ள ட்ரைலரில் டாக்டர் ஆக்டோபஸ் கதாபாத்திரமும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஸ்பைடர் மேன் யார் என்று தெரிந்தது
ஸ்பைடர் மேனின் மார்வெல் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, ஹீரோ முகமூடி அணியாமல் இருக்கிறார். இளம் பீட்டர் பார்க்கர் (டாம் ஹாலண்ட்) மைஸ்டீரியோவை (ஜேக் கில்லென்ஹால்) எடுத்து சென்று விடுகிறார். ஸ்பைடர் மேன் யார் என்பது உலகத்திற்கு தெரிந்து விடுகிறது. இதனால் மக்களின் நினைவுகளை அழிக்க பீட்டர் பார்க்கர் நினைக்கிறார். இதற்காக டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் உதவியை நாடுகிறார் அவர் மந்திரத்தால் மக்களின் நினைவுகளை அழிக்கிறார். இதனால் உலகம் பல ஆபத்தான நிகழ்வுகளை சந்திக்கிறது.

பூமிக்குள் புதையும் கட்டிடம்
நீ இரண்டு விதமான வாழ்க்கை வாழ்க்கை வாழ நினைக்கிற, இது தொடர்ந்தால் உனக்கு ஆபத்து அதிகமாகிட்டே இருக்கும் பார்க்கர் என்று ஸ்ட்ரேஞ்ச் குரலில் டிரைலர் முடிவடைகிறது. இந்த டிரைலரே செம சூப்பராக திகைப்பூட்டும் வகையில் இருந்தது. மொத்த பூமியும் மண்ணுக்குள் போவது போலவும், ரயில்கள் அனைத்தும் வனத்தில் அந்தரத்தில் சூழல்வது போலவும் டிரைலரில் காட்சி அமைக்கப்பட்டு இருந்தன.


Click it and Unblock the Notifications











