twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பைடர் மேன் படத்தின் 20 ஆண்டு கொண்டாட்டம்... தொலைக்காட்சியிலிருந்து திரையரங்குகளில் சாதனை!

    |

    சென்னை : கடந்த 2002ல் ஸ்பைடர் மேன் சீரிஸ் படங்களின் முதல் பாகம் வெளியானது. சாகச வீரர்களின் இத்தகைய படங்களை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படம் சமீபத்தில் ரிலீசானது. ஆனால் இந்தப் படத்தில் முதல் பாகம் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.

    புல்லரிக்கவைத்த… ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்… எப்படி இருக்கு!புல்லரிக்கவைத்த… ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்… எப்படி இருக்கு!

    ஸ்பைடர்மேன் வரிசை படங்கள்

    ஸ்பைடர்மேன் வரிசை படங்கள்

    ஸ்பைடர் மேன் வரிசை படங்கள் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக இருந்து வருகின்றன. இந்தப் படங்களின் விறுவிறுப்பு ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன. இந்தப் படங்களின் சாகசங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகின்றன.

    எவர்கிரீன் கேரக்டர்

    எவர்கிரீன் கேரக்டர்

    தங்களின் கற்பனையில் வசீகரிக்கும் இத்தகைய கதாபாத்திரங்கள் எப்போதுமே ரசிகர்களின் எவர்கிரீன் கேரக்டர்களாக இருந்து வருகின்றன. அந்த வகையில் கார்ட்டூன் கேரக்டர்களாக இருந்துவந்த ஸ்பைடர் மேன் கடந்த 2002ல் திரையில் வடிவம் பெற்று முதல் படமான ஸ்பைடர் மேன் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது.

     ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம்

    ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம்

    தொடர்ந்து ஸ்பைடர் மேனின் அடுத்தடுத்த சீரிஸ்கள் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் வெளியாகி உலகளவில் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார்.

    சூப்பர் ஹீரோக்களின் தாயகம்

    சூப்பர் ஹீரோக்களின் தாயகம்

    சூப்பர் ஹீரோக்களின் தாயகமாக இருந்த ஸ்பைடர் மேனை ஒட்டியே மற்ற சூப்பர் ஹீரோக்கள் உருவாக்கப்பட்டனர். இந்தப் படம்தான் முதல்முதலில் முதல் வாரத்தில் 100 மில்லியன் டாலர் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில் ஸ்பைடர் மேன் படம் வெளியாகி தற்போது 20 ஆண்டுகளை கடந்துள்ளது.

    1 நிமிட வீடியோ வெளியீடு

    இதை தற்போது படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இதை கொண்டாடும் வகையில் 1 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதில் முதல்முதலில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஸ்பைடர் மேன் முதல் தற்போது வெளியாகியுள்ள ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் வரையில் அனைத்து படங்களின் கலவை கொடுக்கப்பட்டுள்ளது.

    தொலைக்காட்சியிலிருந்து திரையரங்கு

    தொலைக்காட்சியிலிருந்து திரையரங்கு

    காமிக் கேரக்டராக இருந்த ஸ்பைடர்மேன் தொடர்ந்து 1970களில் தொலைக்காட்சிகளில் சிறப்பான கேரக்டராக உருவாக்கம் பெற்று அதன் சாகசங்களுடன் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றன. இதை தொடர்ந்தே இந்தக் கேரக்டரை சினிமாவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 2002ல் ஸ்பைடர்மேன் படம் வெளியானது.

    English summary
    Spiderman celebrates 20 years of theatrical release
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X