For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Black Adam Twitter Review: ராக்கின் பிளாக் ஆடம் படம் எப்படி இருக்கு? சூப்பர் ஸ்பாய்லரும் இருக்கு!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆக்‌ஷன் ஹீரோவாக ஹாலிவுட்டில் அசத்தி வந்த டுவைன் ரான் ஜான்சன் இப்போ சூப்பர் ஹீரோவாகவும் மாறி விட்டார்.

  DC ரசிகர்களுக்கும் ஒரு தரமான சூப்பர் ஹீரோ கிடைத்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  மேலும், ரசிகர்களுக்கு தியேட்டரில் ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆக வரும் அந்த ஒரு சூப்பர் ஹீரோ குறித்த ஸ்பாய்லரும் சோஷியல் மீடியாவில் வெளியாகி விட்டது. பிளாக் ஆடம் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

  கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித். கலாய்த்து தள்ளிய கிறிஸ் ராக்: இதுக்கு ஒரு முடிவே இல்லையா?கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித். கலாய்த்து தள்ளிய கிறிஸ் ராக்: இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

  என்னது ஆதாமா

  என்னது ஆதாமா

  ஆதாம் பற்றி கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேச என்ன ஆதமா? என ஜிபி முத்து அப்பாவியாக கேட்டதும் பாதாம் தெரியுது ஆதாம் தெரியலையா என மீண்டும் கமல் கேட்க, ஆதாம் எங்கிருக்காரு என ஜிபி முத்து மறுபடியும் கமலை கலாய்த்த நிகழ்ச்சிகள் பிக் பாஸில் களைகட்ட ரியலாகவே பிளாக் ஆடமாக அவதரித்துள்ளார் நம்ம டுவைன் ராக் ஜான்சன். தியேட்டரில் டைட்டில் போட்டவுடனே ரசிகர்கள் என்ன ஆதாமா? என ஜிபி முத்து டோனிலேயே கத்தவும் ஆரம்பித்தது எல்லாம் வேறலெவல் ரகளை.

  டிசி கம்பேக்

  டிசி கம்பேக்

  மார்வெல் ஒரு பக்கம் மாஸ் காட்டி வரும் நிலையில், டிசியில் இருந்து வெளியான பேட்மேன் படம் கூட பெரிதாக சோபிக்காத நிலையில், கமர்ஷியல் எலிமெண்டுகள் அதிகம் அடங்கிய சூப்பர் ஹீரோவாக பிளாக் ஆடம் களமிறங்கி டிசிக்கு கம்பேக் கொடுத்துள்ளார் என்றே படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

  டிசியின் பாகுபலி

  டிசியின் பாகுபலி

  இதுவரை வெளியான டிசி படங்களை விட தாறுமாறாக மார்வெல் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ், ஆக்‌ஷன் காட்சிகள் என கெத்து காட்டுகிறது ராக்கின் பிளாக் ஆதாம் என ரசிகர்கள் பாகுபலி சிலை மீம் உடன் சேர்த்து ட்வீட் போட்டு வருகின்றனர்.

  அடுத்த பாகம் வேண்டும்

  அடுத்த பாகம் வேண்டும்

  பிளாக் ஆடம் படத்தின் அத்தனை நட்சத்திரங்களும், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்துள்ளது. உடனடியாக அடுத்த பாகத்தை ரிலீஸ் செய்யுங்க என்பது மட்டும் தான் எனது இப்போதைய கோரிக்கை என இந்த ரசிகர் பெரிய ரெக்வஸ்ட் வைத்துள்ளார். பொறுங்கப்பா.. சிஜி எல்லாம் பக்காவா பண்ணி வேலைகளை முடித்து வெளியே வரட்டும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  ஜேம்ஸ் பாண்ட் நடிகர்

  ஜேம்ஸ் பாண்ட் நடிகர்

  கோல்டன் ஐ, டை அனதர் டே உள்ளிட்ட பல ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்த பிரபல ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் இந்த படத்தில் டாக்டர் ஃபேட் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மாதிரியே ஒரு கதாபாத்திரமா? என ரசிகர்கள் கிண்டல் செய்தாலும், அவரது கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பலமாக மாறியுள்ளது.

  சூப்பர் ஸ்பாய்லர்

  சூப்பர் ஸ்பாய்லர்

  பிளாக் ஆதாம் படத்தில் டிசி ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு ஸ்பெஷல் கேமியோ இருக்கு. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸாக வந்தது கூட வெளியே தெரிந்து விட்டது. ஆனால், கடைசி வரை ரகசியமாக படக்குழு வைத்திருந்த அந்த ஒரு ஸ்பெஷல் கேமியோவை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் போட்டு உடைத்து விட்டனர். மேன் ஆஃப் ஸ்டீல் படத்தில் சூப்பர்மேனாக நடித்த ஹென்ரி கவிலின் அதிரடி என்ட்ரி மற்றும் பிளாக் ஆடம் கூட அவர் சண்டைப் போடும் காட்சிகள் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய செய்தது. சில லேக் பிரச்சனைகள் இருந்தாலும், இந்த தீபாவளிக்கு பிரம்மாண்ட ஹாலிவுட் படம் பார்க்கணும்னு நினைக்கிறவங்க தாராளமாக பிளாக் ஆடம் படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.

  English summary
  DC's powerful super hero Black Adam movie Twitter Review and super cameo reveals are here. Dwayne Johnson performed well as a new Super hero and DC fans hails for his action sequences.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X